ட்ரூகாலரில் இருந்து உங்கள் போன் நம்பரை டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

ட்ரூகாலர் ஆப் வசதியில் ஏற்கனவே தனியுரிமை மற்றும் பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளதாக செய்திகள் வெளிவந்தது. குறிப்பாக இந்த ஆப் வசதி அறியப்படாத தொலைபேசி எண்களின் தொடர்பு விவரங்களை கண்டறிய பலருக்கும்

கைகொடுக்கும் ஒரு பயன்பாடாக உள்ளது.அதாவது இந்த ட்ரூகாலர் ஆப் வசதி பயனர்கள் வழங்கிய சரியான அனுமதிகளுடன் அறியப்பாடத அழைப்பாளரிடமிருந்து உள்வரும் அழைப்புகளை தானாகவே ஸ்கேன் செய்து வைத்து, அழைப்பை எடுப்பதற்கு முன்பே அதைப்பறிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்கும்.சுருக்கமாக கூறவேண்டும் என்றால், குறிப்பிட்ட எண்களை பற்றிய தகவல் சேகரிப்பை நிகழத்த ட்ரூகாலர் ஆப் ஆனது பயனர்களின் போன் காண்டாக்ட்களை நம்பியுள்ளது. அதாவது இந்த ஆப் பயன்பாட்டை நீங்கள் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட, உங்களின்எண்களை பற்றிய தொடர்பு விவரங்கள் ட்ரூகாலரில் கிடைக்கின்றன,ஏனெனில் இந்த ஆப் பயன்பாட்டைப் பயன்படுத்தும் எவரோ ஒருவர் உங்கள் மொபைல் எண்ணை அவரது போனில் சேமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே இந்த ட்ரூகாலர் ஆப் வசதி ஆனது அதன் தரவுத்தளத்திலிருந்து உங்களின் மொபைல் எண்ணை அன்லிஸ்ட் (பட்டியலிடப்படுவதை நீக்குவதற்கான) வசதியை வழங்குகிறது. ஆனால் அதைச் செய்ய மக்கள் தங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

மேலும் உங்கள் ட்ரூகாலர் கணக்கை நிரந்தரமாக நீக்குவதற்கும், உங்களது மொபைல் எண்ணை தரவுத்தளத்திலிருந்து அன்லிஸ்ட் செய்வதற்கும் நீங்கள் தயாராக இருந்தால், கீழ்வரும் வழிமுறைகள் பின்பற்றவும்.

ட்ரூகாலர் கணக்கை டீஆக்டிவேட் செய்யும் வழிமுறைகள்

வழிமுறை-1

முதலில் உங்கள் போனில் இருக்கும் ட்ரூகாலர் ஆப்வசதியை திறக்கவும்.

வழிமுறை-2

அடுத்து மேல் வலது மூலையில் இருக்கும் மூன்று புள்ளிகள் அல்லது கியர் ஐகானைகிளிக் செய்யவும்.

%d bloggers like this: