Daily Archives: ஜூலை 8th, 2020

COVID-19 தடுப்பு மருந்து பயன்பாட்டுக்கு வருவதற்கான நடைமுறைகள் என்னென்ன?

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஒரு நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டால், செயல்முறைகள், பரிசோதனைகள் என்று என்னென்ன கட்டங்களைக் கடந்து சந்தைக்கு வரும்? அது கண்டுபிடிக்கப்பட்ட நாளிலிருந்து சந்தைக்கு வருவதற்குக் குறைந்தபட்சம் எத்தனை நாள்கள் ஆகும்?” என்று கேள்வி எழுப்பியிருந்தார் வாசகர் கோகுல் ராஜா. அந்தக் கேள்வியின் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை இது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இந்தியா கண்டுபிடித்த தடுப்பு மருந்துதான் `கோவாக்சின்’ (COVAXIN). இது மனிதர்கள் மீது பரிசோதனை செய்யும் கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த வாரம்தான், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்திடமிருந்து அதற்கான ஒப்புதல் கிடைத்தது. இரண்டு கட்டங்களாக 1,100 பேருக்கு இந்தத் தடுப்பு மருந்து பரிசோதனை செய்யபடவிருக்கின்றது.

Continue reading →

கொரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `அவேக் ப்ரோனிங்’ – மருத்துவ விளக்கம்!

உலக சுகாதார நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக மருந்துகள் ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் உலகளவில் கொரோனாவுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் ‘ப்ளாஸ்மா தெரபி’, ‘அவேக் ப்ரோனிங்’ போன்ற சிகிச்சை முறைகள் ஓரளவு நம்பிக்கையளிக்கின்றன.

Continue reading →

யாரை மாற்றுவது… யாருக்குப் புதிய பொறுப்பு?’ – தீவிர ஆலோசனையில் அ.தி.மு.க தலைமை

ஆளும்கட்சியாக அ.தி.மு.க இருந்தாலும் கட்சி அமைப்புரீதியாகப் பலவீனம் அடைந்துள்ளது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, பன்னீர்செல்வம் அணி தனியாகப் போனது, தினகரன் தனிக்கட்சி கண்டது என அடுத்தடுத்த சோதனைகளால் அ.தி.மு.க-வின் கட்டமைப்புக்குள் விரிசல்கள் ஏற்பட்டன

Continue reading →