யாருக்கெல்லாம் மீண்டும் கொரோனா தாக்கும்? ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது?

கொரோனா தொற்றால் லேசான அறிகுறி ஏற்பட்டு குணமடைந்தவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி விரைவில் மங்கிவிடும், அவர்களை மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கும் ஆபத்து உள்ளது என்று புதிய ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி எந்த அளவு வீரியமுடையதாக இருக்கிறது என தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்வீடனின் உயர்மட்ட சுகாதார ஆணையம் செவ்வாயன்று, வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் தொற்றுக்கு பின் அவர்களது உடல் ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்தாலும், செய்யாவிட்டாலும் ஆறு மாதங்கள் வரை நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்க வாய்ப்புள்ளது என கூறியிருந்தது.அதே போல் லண்டனைச் சேர்ந்த கிங்ஸ் கல்லூரியின் சமீபத்திய ஆய்வில், ஆன்டிபாடிகளின் அளவு, ஒரு அளவிற்கு வீழ்ச்சியடையக்கூடும், தொற்று ஏற்பட்டு மூன்று மாதங்களுக்குள் அவற்றைக் கண்டறியமுடியாது. இருப்பினும் டி-செல்கள் போன்ற நோய் எதிர்ப்பு சக்தி கொரோனா வைரஸிடமிருந்து மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும் என கூறியிருந்தது. இந்நிலையில் சமீபத்திய கண்டுபிடிப்புகள் லேசான அறிகுறிகளைக் கொண்டவர்களுக்கு ஆன்டிபாடிகளால் மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்க முடியாது என தெரிய வந்துள்ளது.
நியூ இங்கிலாந்து மருத்துவ சஞ்சிகையில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றால் லேசான அறிகுறிகள் ஏற்பட்டு மீண்டவர்களின் ஆன்டிபாடிகளை பரிசோதனைக்கு எடுத்தனர். அறிகுறி தொடங்கிய 37 நாட்களுக்கு பின் எடுக்கப்பட்ட ஆன்டிபாடிகளை ஆய்வு செய்ததில் அவை குறையவில்லை. பின்னர் 86 நாட்களுக்குப் பிறகு ஆய்வு செய்து பார்த்த போது ஆன்டிபாடி அளவுகள் விரைவாக வீழ்ச்சியடைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். சார்ஸை விட இதில் ஆன்டிபாடிகளின் இழப்பு மிக விரைவாக நிகழ்ந்தது. பெரும்பாலானவர்கள் லேசான அறிகுறி ஏற்பட்டு மீண்டவர்கள் என்பதால் அவர்களை மீண்டும் கொரோனா தாக்கும் என்கிற முடிவுக்கு வந்துள்ளனர்.

%d bloggers like this: