கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது…!! விஞ்ஞானிகளை அதிரவைத்த ஆராய்ச்சி முடிவுகள்..!!

கொசுக்கள் ஏன் மனித ரத்தத்தை குடிக்கின்றன என்பது தொடர்பாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் சில அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கொசுக்கள் ஏன் ரத்தம் குடிக்கிறது, அதற்கான காரணம் என்ன என்பது குறித்து

பல ஆண்டுகளாக ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. ஏனெனில் உலகில் ஆரம்பத்தில் கொசுக்கள் ரத்தம் குடிக்கும் உயிரியாக இல்லை, ஆனால் அது காலப்போக்கில் மனிதர்கள் மற்றும் பிற விலங்குகளின் ரத்தத்தை குடிக்கும் உயிரியாக மாறியது. ஏனெனில் அவைகள் வறண்ட நிலையில் வாழ்ந்ததாகவும், பொதுவாகவே கொசுக்கள் அவற்றில் இனப்பெருக்கத்திற்கு போதிய தண்ணீர் கிடைக்காத போதெல்லாம் அவை மனிதர்கள் அல்லது விலங்குகளின் ரத்தத்தை உறிஞ்ச தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

(அதாவது ஜிகா வைரஸ் பரப்புகின்ற கொசுக்கள் இவைகள்தான் இவைகளால் டெங்கு மற்றும் மஞ்சள் காய்ச்சல் ஏற்படுகிறது) அந்த புதிய ஆராய்ச்சியில் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி, ஆப்பிரிக்காவின் கொசுக்களில் ஏடிஎஸ், ஏஜிஎப்டி கொசுக்களில் பல இனங்கள் உள்ளன. அதில் எல்லா இன கொசுக்களும் ரத்தம் குடிப்பது இல்லை, இன்னும் பல வகையான உணவுகளை சாப்பிட்டு, குடித்து அவைகள் உயிர்வாழ்கின்றன என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் நோவா ரோஸ் கூறுகையில், பல்வேறு வகையான கொசுக்களின் உணர்வை இதுவரை யாரும் ஆய்வு செய்ததில்லை, ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பிராந்தியத்தில் 27 இடங்களில் இருந்து ஏடிஸ், ஏஜிஎப்டி கொசு முட்டைகளை நாங்கள் எடுத்தோம், அந்த முட்டைகளில் இருந்து கொசுக்களை வெளியேற்றியதுடன், கினிப் பன்றி மற்றும் இன்ன பிற விலங்குகளை கொசுக்களுடன் மூடிய பெட்டிகளில் அடைத்து அவற்றின் ரத்தம் குடிக்கும் முறை பற்றி ஆராய்ந்தோம்.

அதில் ஏடிஎஸ், ஏஜிஎப்டி கொசுக்களின் வெவ்வேறு இனங்களில் உணவு பழக்கவழக்கம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பது தெரியவந்தது. எனவே எல்லா கொசுக்களும் ரத்தம் குடிக்கிறது என்பது தவறு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது என நவாப் கூறினார். அதிக வரட்சி அல்லது வெப்பம் நிறைந்த பகுதி மற்றும் தண்ணீர் குறைவாக உள்ள இடங்களில் தண்ணீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய கொசுக்கள் மனிதர்கள் மற்றும் பிற உயிர்களின் ரத்தத்தை குடிக்க தொடங்குகின்றன. பொதுவாக கொசுக்கள் இனப்பெருக்கம் செய்ய ஈரப்பதம் தேவை என்பதால் அது வறண்ட பகுதிகளில் ரத்தம் குடிக்கிறது, கொசுக்களில் இந்த மாற்றம் நேற்றோ இன்றோ உருவானது அல்ல, பல ஆயிரம் ஆண்டுகளாக மெல்ல மெல்ல ஏற்பட்டதாகும், வளர்ந்து வரும் நகர்மயம் காரணமாக ஏற்பட்டுவரும் நீர் பற்றாக்குறையை எதிர்த்துப் போராட தொடங்கியது முதல் அது நாளடைவில் மனித ரத்தத்தை குடிக்கும் உயிரியாகவும் மாறியுள்ளது. அதேபோல், மனிதர்கள் தண்ணீரை சேமித்து வைக்கும் இடத்தில், அனோபிலிஸ் கொசுக்களுக்கு (மலேரியா பரப்பும் கொசு) எந்த பிரச்சனையும் இல்லை. அவை குளிரூட்டிகள், பானைகள், படுக்கைகள் போன்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. ஆனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டவுடன், அவைகள் உடனடியாக மனிதர்களையோ அல்லது பிற உயிரினங்களையோ இரத்தத்திற்காக தாக்குகின்றன.என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

%d bloggers like this: