நியமனம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் முதல் சம்பவம் ! அதிர்ச்சியில் திமுக !!!

தமிழகத்தை சேர்ந்த அமுதா IAS பிரதமர் அலுவலக இணை செயலாளராக நியமிக்க பட்டது, தமிழகத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர், திமுக தரப்பிலும், பல்வேறு பத்திரிகையாளர்களும் வாழ்த்து செய்தியை வெளியிட்டனர்.

இந்நிலையில் அமுதா IAS நியமனம் செய்யபட்டது திமுகவிற்குள் கடுமையான குடைச்சலை உண்டாக்கியது, திடீர் என அமுதா IAS பிரதமர் அலுவலகத்தின் நியமிக்க பட்டதன் பின்னணியில் தமிழக ஆளுநர் அலுவலகம் இருக்கலாம் எனவும் திமுக தரப்பில் சந்தேகம் இருந்தது, இந்நிலையில் தற்போது மற்றுமொரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியிருக்கிறது.

திமுக எம் பி கனிமொழி மற்றும் ஆ ராசா இருவரும் தொடர்புடைய 2ஜி வழக்கின் முக்கிய கோட்புகள் அனைத்தும் ஒரு வாரத்திற்குள் டெல்லிக்கு அனுப்பி வைக்க உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளதாம், இவை தற்போது இருக்கும் உயர்மட்ட அதிகாரிகளுக்கு செல்லவில்லையாம், முதன் முதலில் இங்கு கனிமொழி, ராசா ஆகியோரை விசாரணை செய்த அதிகாரிகளின் முதல் கட்ட விசாரணை செய்த அதிகாரிகளிடம் இருந்து அனுப்ப உத்தரவு வந்து இருக்கிறதாம்.

இது திமுகவிற்கு முதல்கட்ட அதிர்ச்சி என்றால் மற்றொரு சம்பவம் தமிழக அரசின் சில தலைவர்களை ஆட்டம்கான செய்துள்ளது, இதுநாள் வரை தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்ட சிலை கடத்தல் வழக்கை விசாரணை செய்துவந்த முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு IG பொன்மணிக்கவேலுக்கு அவரது பதவி காலத்தில் பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டது, அவர் ஓய்வு பெறுவதற்கு கடைசி நாள் முன்னர் வரை அவருக்கு அலுவலகத்தை கூட அரசு ஒதுக்கவில்லை.

இந்த நிலையில் சிலை கடத்தல் குறித்த அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு அனுப்ப உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது, அதில் முக்கிய பிரமுகர்கள் பலரும் இருக்கலாம் என்பதால் இந்த வழக்கை NIA எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அமுதா IAS பிரதமர் அலுவலக இணை செயலாளராக பதவியேற்று 48 மணி நேரத்திற்குள் உடனடியாக வழக்குகள் தூசித்தட்ட படுகிறது என்றால்.

அடுத்த 6 மாதத்திற்குள் தண்டனை கிடைக்கும் வகையில் அனைத்து ஆதாரங்களும் திரட்டப்படும் என கூறப்படுகிறது, 2014 ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி படு தோல்வி அடைய காரணமே 2ஜி வழக்குதான் எனவும் அது முடிவு வேறுமாதிரியாக அமைந்தால் திமுகவின் எதிர்காலம் மீண்டும் கேள்வி குறி ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.

%d bloggers like this: