வந்துவிட்டது..வாட்ஸ்ஆப்பில் ‘டார்க் மோடு’ வசதி!

உலகளவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோடு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள வாட்ஸ்ஆப் நிறுவனம் பயனர்களின் வசதிக்கேற்ப டார்க் மோடு வசதியை சோதனை முயற்சியாக சில பகுதிகளில் அறிமுகப்படுத்தியது. சோதனை முயற்சி வெற்றி பெற்றதை அடுத்து, தற்போது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு தளங்களில் டார்க் மோடு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில் வெளியாகும் சில ஸ்மார்ட் போன்களிலேயே ‘டார்க் மோடு’ வசதி வந்துவிட்டது.டார்க் மோடு என்பது இரவில் குறைந்த ஒளியில் நாம் திரையை பார்க்கும் வசதி. வழக்கமாக வெள்ளை நிறத்தில் இருக்கும் பின்திரை ‘டார்க் மோடு’ ஆன் செய்யும் பட்சத்தில் கருப்பு/சாம்பல் நிறத்தில் மாறிவிடும். இதன்மூலமாக கண்களுக்கு பாதுகாப்பு மட்டுமின்றி, பேட்டரி சார்ஜ் கணிசமாக குறைவதைத் தடுக்க முடியும். தொடர்ந்து, வாட்ஸ்ஆப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘டார்க் மோடு’ அம்சத்தை உலகளவில் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு சாதனங்களில் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கிற்குச் சொந்தமான சமீபத்திய பதிப்பைக் கொண்டு இந்த அம்சம் வெளியிடப்படுகிறது. கண் சோர்வை குறைக்கும் வகையில் அதே நேரத்தில் குறுஞ்செய்திகளை வாசிக்கும் வகையில் அடல் சாம்பல் நிறம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக வாட்ஸ்ஆப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10 மற்றும் iOS 13 வைத்திருக்கும் பயனர்கள் டார்க் மோடு முறையை கணினி அமைப்புகளில் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு 9 மற்றும் அதற்கு மேற்பட்ட பதிப்புகளில் உள்ள பயனர்கள் வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதிக்குச் சென்று ‘தீம்’ அல்லது ‘டார்க்’ என்பதைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். வெகு விரைவில் அனைத்து ஸ்மார்ட் போன்களுக்கும் டார்க் மோடு வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

%d bloggers like this: