பெண்களுக்கு முதுகு வலி வர முக்கிய காரணம் சமையலறையில் செய்யும் தவறுகள்.!

பெண்களின் மிகப் பெரிய உலகம் தன்னுடைய குடும்பமும் சமையல் அறையும் தான். பொதுவாக பெண்கள் ஆண்களை விட உடல் வலிமை குறைந்தவர்கள் எனவே அவர்கள் சமையல் அறையில் சில வேலைகளில் ஈடுபடும் பொழுது அவர்களது உடல்களுக்கு

வலிகளும் காயங்களும் ஏற்படும் இவை ஏற்படாமல் தடுக்க சில நல்ல வழிமுறைகளைப் பின்பற்றலாம்.

  • பொருட்கள் இருக்கும் அலமாரி நமது உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். உயரமான அலமாரியில் இருந்து பொருட்களை மேல் நோக்கி பார்த்து எடுக்கும்போது கழுத்து வலியும், கை வலியும் ஏற்படும். இதைத் தவிர்க்க அலமாரியைச் சரியான உயரத்தில் அமைக்க வேண்டும். இல்லையெனில், ஒரு அகலமான மரப்பலகை வைத்துக்கொண்டு அதன் மீது ஏறி நின்று, பொருட்களை முன்கூட்டியே கீழே எடுத்துவைத்துக்கொண்டு பயன்படுத்தலாம்.
  • காய்கறிகளை வெட்டும்போது, நின்றுகொண்டு வெட்டுவதுதான் சிறந்ததாகும். அப்போதுதான் நம் உடலில் இருக்கும் மொத்த சக்தியும் முறையாகப் பயன்படுத்திக் காய்கறிகளை வெட்ட முடியும். உடலில் தேவை இல்லாமல் வலி ஏற்படாது. கீழே அமர்ந்துகொண்டு வெட்டினால், கைகளில் இருக்கும் சக்தியை மட்டுமே பயன்படுத்தி வெட்ட முடியும். இதனால் கைகளில் வலி ஏற்படும்.
  • சமைக்கும்போது பின்னால் இருக்கும் ஒரு பொருளை எடுக்க வேண்டி இருந்தால், கைகளை மட்டும் பின்னே நீட்டி அந்தப் பொருளை எடுப்பது முற்றிலும் தவறு. அப்போது இடுப்புப் பகுதித் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு இடுப்பு வலி வரும்
  • பாத்திரம் கழுவப் பயன்படும் தொட்டி உயரம் நம் உயரத்துக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். அதாவது, குனிந்தோ அல்லது எட்டிப் பார்த்தோ பாத்திரங்களைக் கழுவும் படி இருக்கக் கூடாது. பெரும்பாலும் நின்று கொண்டு பாத்திரம் கழுவினால் அவர்களுக்கு இடுப்பு வலி வராது செயல்பாட்டைப் பொறுத்து அவர்கள் வேலையை கையாள வேண்டும்
  • கிரைண்டரில் மாவு அரைக்கும்போது நின்ற நிலையில்தான் கிரைண்டரைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு ஏற்றவாறு கிரைண்டரைச் சற்று உயரத்தில் வைத்துகொள்ள வேண்டும். அதை விடுத்து கிரைண்டரைத் தரையில் வைத்துவிட்டு அடிக்கடி குனிந்து, நிமிர்ந்து வேலை செய்யும்போது முதுகுப் பகுதிகளில் இருக்கும் தசைகளில் இறுக்கம் ஏற்பட்டு, முதுகு வலி உண்டாகும்.

நமக்கு ஆரோக்கியமாக இருக்க உணவளிக்கும் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டாமா எனவே இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களை அனைவரிடமும் கொண்டு சேருங்கள்.

%d bloggers like this: