ஜனன காலத்திலிருந்தே சில குழந்தைகளுக்கு ஜாதக பலாபலன்களை பார்க்கிறார்களே.. குறிப்பாக எந்த வயதிலிருந்து ஜாதகர்களுக்கு கிரஹங்கள் தன் பலாபலன்களைத் தருகிறது?

குழந்தை கர்ப்பத்தில் உருவாகும்போதே கிரகங்கள் தன் பணியைச் செய்யத் துவங்கி விடுகின்றன. ஆனால், மனிதர்களாகிய நாம் அதனை அறிந்து கொள்வது என்பது குழந்தை இந்த பூமியில் உதித்த பின்புதான் இயலும். இந்த பூமியில் உதித்தவுடன் குழந்தை சுவாசிக்கும் முதல் மூச்சின் காலமே அதன் ஜனன நேரமாக அறியப்படுகிறது. அதனை ஒட்டியே ஜாதகம் என்பது கணிக்கப்பட்டு

பலன்களை அறிந்துகொள்ள முயற்சிக்கிறோம். ஆக ஜனன காலத்திலிருந்தே அந்தக் குழந்தைக்கான பலன்களை ஜாதகம் கணித்து தெரிந்துகொள்ள முடியும்.
ஆனால், ஒரு வயது வரை அந்தக் குழந்தை இறைவனின் குழந்தை என்றும், ஒரு வயது முடிந்ததும் குலதெய்வத்தின் கோயிலில் சிகை நீக்கி காதணி விழா நடத்தி அதனை இறைவனிடமிருந்து நமது குழந்தையாக ஸ்வீகரித்துக் கொள்கிறோம் என்றும் சம்பிரதாயம் இருப்பதால் அது வரை பொதுவாக குழந்தைக்கு ஜாதகம் எழுதி வைப்பதில்லை.
ஒரு வயது முடிந்த பின்னர் ஜாதகம் எழுதி பலன்களைத் தெரிந்துகொண்டால் போதுமானது என்று பெரும்பான்மையான ஜோதிடர்கள் சொல்வதன் காரணமும் இதுவே. கிரஹங்களின் தாக்கம் என்பது குழந்தை ஒரு தாயின் வயற்றில் உருவாகும்போதே துவங்கிவிடுகிறது என்பதும், ஜாதகத்தை கணித்து பலன்களைத் தெரிந்துகொள்வது என்பது அந்தக் குழந்தை பிறந்து ஒரு வருடம் முடிந்த பின்னரே என்பதும் உங்கள் வினாவிற்கு உரிய தெளிவான விடை ஆகும்.

%d bloggers like this: