சசிகலா வருகை.. தனித்துவிடப்படும் ஓபிஎஸ். சசிகலாவிடம் சரண்டராக காத்திருக்கும் எடப்பாடி..!அதிமுக உடையும் அபாயம்.

தமிழ்நாட்டுக்கு விரைவில் சட்டமன்றத்தேர்தல் வர இருக்கின்ற சூழ்நிலையில்… சசிகலாவும் சில மாதங்களிலோ, நாட்களிலோ வெளியில் வர இருக்கிறார்.அவர் வந்தவுடன் அதிமுகவில் மிகப்பெரிய பிரலயமே நடக்க

தயாராகிக்கொண்டிருக்கிறது. தேர்தல் நேரத்தில் சசிகலா வெளியில் வருவது தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அதிமுக அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரைக்கும் பயந்து போய் இருக்கிறார்கள்.அதற்குள்ளாகவே இவர்கள் தங்களே எந்த பக்கம் இணைத்துக்கொண்டால் பாதுகாப்பாக இருக்கும் என்று கணிக்கதொடங்கியிருக்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

தற்போது அதிமுகவை ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரும் இணைந்து வழிநடத்திக்கொண்டிருக்கிறார்கள்.இந்த கட்சியை இயக்குவது நீயா?

இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தனது மகனின் நண்பனான ஜெயா டிவி நிர்வாக இயக்குனர் விவேக் ஜெயராமன் மூலம் சசிகலாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். ஆனால் சசிகலா மீண்டும் அதிமுகவில் இணைவதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் விரும்பவில்லை. இந்நிலையில் ஆரம்பத்தில் இருந்தே ஒபிஎஸ் மற்றும் இபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்து கொண்டே வருகிறது.ஒபிஎஸ் கட்சியில் எக்காரணம் கொண்டும் அதிகாரம் செலுத்திவிடக் கூடாது என்பதில் மிகத் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி.

ஒபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் மத்திய இணை அமைச்சர் ஆவதை தடுத்து நிறுத்தியது எடப்பாடி பழனிச்சாமி தான் என்று அந்த நேரத்தில் அனல்பறந்தது. இவர் மத்திய இணை அமைச்சர் எடப்பாடி டெல்லி லாபி செய்ய முடியாது என்று அஞ்சியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜகவால் தான் சசிகலா சிறைக்கு சென்றார் என்றும், ஆகையால் பாஜக மீது உள்ள கோபம் சசிகலாவுக்கு இன்னும் குறையவில்லை என்பதை நன்கு அறிந்த எடப்பாடி, சசிகலா வெளியில் வருவதற்குள் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்ற முடிவு செய்துள்ளார்.
அதன் காரணமாகவே மும்மொழிக்கொள்கையை எதிர்த்து பாஜகவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார் எடப்பாடி. இது குறித்து முழு விபரத்தை அறிந்த டெல்லி பாஜக, அதிமுக அரசின் தவறுகளை துணிந்து விமர்சனம் செய்யுங்கள் என்று தமிழக பாஜகவினருக்கு டெல்லி தலைமை உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் வெளிப்பாடு தான், சமீபகாலமாக அதிமுக மீது கடுமையாக விமர்சனம் எழுந்து வருகிறது. ஆனால் அதிமுகவில் இருக்கும் ஒபிஎஸ் தரப்பினர் பாஜக பற்றி ஏதும் கருத்து தெரிவிக்காமல் அமைதி காத்து வருகின்றனர்.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளவும், இளவரசி மகள் கிருஷ்ணப்ரியாவுக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கவும் தயாராக இருக்கிறார் எடப்பாடி. இதன் பின்னணியில் ஒபிஎஸ் கட்சியில் இருந்து ஓரம் கட்டவே, எடப்பாடி இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சசிகலா வெளியில் வருவதற்கு சில நாட்களுக்கு முன், அதிமுக மீண்டும் இரண்டாக உடையும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் மீண்டும் அதிமுக இரண்டாக உடைந்தால், கட்சி மீண்டும் வலுப்பெற வாய்ப்பில்லை என்று உணர்ந்த முக்கிய அதிமுக அமைச்சர்கள், மற்றும் எம்.எல்.ஏ க்கள், பாஜகவுக்கு படையெடுக்க முடிவெடுத்து அதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் பதவிக் காலம் முடியும் தருவாயில் ஒவ்வொருவராக அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. சசிகலா வெளியில் வந்தால், அதிமுக வலுவான நிலைக்கு வரும் என்று பரவலாக பேசப்படுகிறது. சசிகலா வெளியில் வந்தால் அதிமுக இரண்டாக உடையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறது எதிர்க்கட்சிகள்.

%d bloggers like this: