பண்ணை வீட்டில் ரகசிய சந்திப்பு…

சேலத்தில் ஒரு சந்திப்பு நடந்திருக்கிறதே…’’ – தலையைச் சிலுப்பிக்கொண்டே என்ட்ரி கொடுத்தார் கழுகார். “யாரைச் சொல்கிறீர்?’’ கேள்வியுடன் கோதுமை அடையை நீட்டினோம். தேங்காய் சட்னியுடன் சுவைத்து மகிழ்ந்தவர், “வட மாவட்ட முக்கியப் பிரமுகர் ஒருவர் 300 கோடி ரூபாய் செலவில் மருத்துவக் கல்லூரி ஒன்றைக் கட்டிவருகிறார். அதற்கு அனுமதி பெறுவது தொடர்பாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் வந்திருந்தபோது அவரை நேரில் சந்தித்திருக்கிறார். எதிர்முகாமைச் சேர்ந்தவர் என்றாலும், அவரிடம் கரிசனமாகவே பேசி அனுப்பியிருக்கிறார் முதல்வர்’’என்றபடி செய்திக்குள் தாவினார்.  Read More

%d bloggers like this: