வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக புதிய பாதை, புதிய கூட்டணியை நோக்கி புது பயணத்தை தொடங்கியுள்ளது தேமுதிக.
கடந்த மக்களவைத் தேர்தலில் அரை மனதுடன் அதிமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு அங்கு உரிய மரியாதை இல்லை என்பது அக்கட்சி நிர்வாகிகளின் கருத்தாக உள்ளது.
இதனால் இனியும் இப்படியே தொடர்ந்தால் நிர்வாகிகளின் அதிருப்திக்கு ஆளாக கூடும் என்பதால், புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகளை சத்தமின்றி தொடங்கியுள்ளது தேமுதிக.