ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் (சிம்மம் – மகம், பூரம், உத்திரம் 1-ம் பாதம்)

நிர்வாகத் திறமையும், அதிரடித் திட்டங்களைத் தீட்டி நிறைவேற்றும் வல்லமையும், உதவும் குணமும், எதிரிக்கும் நல்லது செய்யும் மனோபாவமும் கொண்டவர் நீங்கள். உங்களுக்கு இந்த ராகு – கேது மாற்றம், ஓய்வெடுக்க முடியாத அளவுக்குப் பரபரப்பையும் அதிக நேரம் உழைக்க வேண்டிய நிலையையும் தருவதாக அமைந்தாலும் அந்தஸ்தை உயர்த்துவதாகவும் இருக்கும்.

ராகுவின் பலன்கள்:

இதுவரை உங்களின் ராசிக்கு 11 – ம் வீட்டில் அமர்ந்து வாழ்வில் ஓரளவு வசதி வாய்ப்புகளையும், பணப்புழக்கத்தையும், புதிய தொடர்புகளையும் கொடுத்து வந்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு 10-வது வீட்டில் வந்தமருகிறார். கடினமான காரியங்களையும் சர்வ சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நிர்வாகத் திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். Read More

%d bloggers like this: