தியாக உணர்வும், திடசிந்தனையும் உள்ளவர் நீங்கள். இந்த ராகு – கேது மாற்றத்தில், ராகுவால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், கேதுவால் வீடு-மனை வாங்கும் யோகமும் உண்டாகும்.
ராகுவின் பலன்கள்:
இதுவரை உங்கள் ராசிக்கு 10 வது வீட்டில் அமர்ந்துகொண்டு ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச் சுமையையும், உத்தியோகத்தில் இடமாற்றங்களையும், சிறுசிறு அவமானங்களையும் தந்த ராகுபகவான், இப்போது 9-ம் வீட்டில் வந்தமர்கிறார். செயற்கரிய காரியங்களையும் இனி முடித்துக் காட்டுவீர்கள். எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். Read More