Daily Archives: ஓகஸ்ட் 23rd, 2020

முதுகுவலியால் அவதிப்படுகிறீர்களா..? இதோ உங்களுக்கான எளிய தீர்வுகள்..!!

  1. முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முதுகெலும்பிலுள்ள தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. ஆனால் இது போன்ற வலிகளுக்கு நமக்கு நாமே காரணம் என்பதை மனதில் கொள்ள வேண்டும். எப்படி அமர்கின்றோம், எப்படி நடக்கிறோம், எப்படி தூங்குகிறோம் என எல்லாமே முதுகுடன் தொடர்புடையதுதான். நாள் முழுக்க நாற்காலியில் அமர்ந்திருக்கும் வேலை செய்யும் எல்லோரும் இருக்கும் பிரச்னை முதுகுவலி.

முதுகுவலியைத் தவிர்க்க நாம் செய்ய வேண்டிய சின்ன சின்ன விஷயங்களைப் பற்றி பார்ப்போம்.

*நாம் தூங்கும் படுக்கை கூட முதுகுவலி வருவதற்கு காரணமாக இருக்கலாம்.

*கீழ் முதுகு வலியால் அவதிப்படுபவர்கள், மூட்டு வலிகள்ReadMore.,,,,,,,,,….

மலர்விழியை பாடாய்படுத்திய நிலக்கடலை! பெற்றோரே… ரொம்ப உஷாராக இருக்கணும்

குழந்தை சிறிய பொருளை தானே கையில் வைத்திருக்கிறது, இதனால் என்ன பிரச்னை வரப்போகிறது என்று, சாதாரணமாக எடுத்துக்கொள்வார்கள் சிலர். அது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதற்கு, குழந்தை மலர்விழிக்கு நடந்த சம்பவமே ஒரு சாட்சி.திருப்பூர் மாவட்டம், கருவம்பாளையம், ஆலங்காடு பகுதியை சேர்ந்த கனகராஜ்,

கார்த்திகா தம்பதிகளின் ஒன்றரை வயது குழந்தை மலர்விழி. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, திடீரென மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டது.இதை பார்த்து செய்வதறியாது திகைத்து போன பெற்றோர், உடனே அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றுள்ளனர்.நிலைமை மோசமடைந்ததால், டாக்டர்களின் பரிந்துரையின் பேரில், கோவை அரசு மருத்துவனைக்கு குழந்தை கொண்டு வரப்பட்டது.மருத்துவமனை டீன் (பொ) காளிதாஸ் அறிவுரையின் படி, காது மூக்கு தொண்டை பிரிவு துறை தலைவர் அலிசுல்தான், மயக்க மருந்தியல் டாக்டர் சதீஷ் ஆகியோர் தலைமையிலான குழுவினர், குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர்.பரிசோதனையில், மூச்சுக்குழாயில் நிலக்கடலை அடைத்திருந்தது தெரியவந்ததுReadMore…,..,..,..,…

இனி எடப்பாடியே நினைத்தாலும்…!” -அ.தி.மு.க யார் கையில்?

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்.தான் என அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டரால் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க. பெருந்தலைகளும் ஆடிப்போய் விட்டன. சமாதான அறிக்கையை பன்னீரும் எடப்பாடியும் இணைந்து வெளியிட்டிருந்தாலும் முதல்வர் யார் என்கிற பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.

அ.தி.மு.க.வில் நடக்கும் அக்கப்போர்களுக்கான பின்னணிகள் குறித்து இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவருக்கும் நெருக்கமான சீனியர் தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது,’””ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவான எடப்பாடி தலைமையிலான ஆட்சி அதிகபட்சம் 1 வருடம்தான் தாங்கும் என அ.தி.மு.க. அமைச்சர்களே நினைத்திருந்தனர்.

இதனால் குழப்பத்தில் இருந்த எடப்பாடிக்கு சசிகலா விடுதலை விவகாரமும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் முதல்வருக்கான (எடப்பாடி) ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பது அவசியம். அதற்கு கட்சியில் மா.செ.க்களையும் ஒ.செ.க்களையும் அதிக அளவில் உருவாக்குங்கள் என்றும், சேலத்தின் முதல்வராக மட்டுமே இருக்கும் அவர், தமிழகத்தின் முதல்வர் முகமாக மாற வேண்டும். அதன் மூலமே Read More,.,.,,,,,,,….,,,…..,,,…..

சமையல் தவிர உப்பின் பிற பயன்பாடுகள்: விவரங்கள் இதோ..!

வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு உப்பு பல வழிகளில் பயன்படுகிறது.

சமையலுக்கு தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று உப்பு. சாப்பாட்டுக்கு தேவையான சுவை கொடுப்பதில் அதன் பங்கு முக்கியமானது. உணவு மட்டுமல்லாமல் வேறு சில வேலைகளுக்கும் உப்பு உங்களுக்கும் உதவும். வீட்டை அழகாக, சுத்தமாக வைத்துக்

கொள்ள நினைப்பவர்களுக்கு உப்பு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வீட்டில் உள்ள கறைகளை அகற்ற நீங்கள் விதவிதமான பொருட்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உப்பு மட்டும் போதும். இது பல மேஜிக் செய்யக் கூடியது.

வீட்டை சுத்தமாக வைத்திருக்க உப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.

உங்கள் வீட்டில் அதிக எறும்புகள் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றின் பாதையில் உப்பை வைப்பதுதான். இல்லையென்றால் எறும்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் உப்பு வைத்து விடுங்கள். சில நிமிடங்களில் எறும்புகள் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் Read More