அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் ஓ.பி.எஸ்.தான் என அவரது ஆதரவாளர்கள் அடித்த போஸ்டரால் முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட ஒட்டுமொத்த அ.தி.மு.க. பெருந்தலைகளும் ஆடிப்போய் விட்டன. சமாதான அறிக்கையை பன்னீரும் எடப்பாடியும் இணைந்து வெளியிட்டிருந்தாலும் முதல்வர் யார் என்கிற பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை.
அ.தி.மு.க.வில் நடக்கும் அக்கப்போர்களுக்கான பின்னணிகள் குறித்து இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இருவருக்கும் நெருக்கமான சீனியர் தலைவர் ஒருவரிடம் நாம் பேசியபோது,’””ஜெயலலிதா மறைவுக்கு பிறகு உருவான எடப்பாடி தலைமையிலான ஆட்சி அதிகபட்சம் 1 வருடம்தான் தாங்கும் என அ.தி.மு.க. அமைச்சர்களே நினைத்திருந்தனர்.
இதனால் குழப்பத்தில் இருந்த எடப்பாடிக்கு சசிகலா விடுதலை விவகாரமும் கவலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான், சசிகலா வெளியே வரும் பட்சத்தில் அ.தி.மு.க.வில் முதல்வருக்கான (எடப்பாடி) ஆதரவாளர்கள் அதிகமாக இருப்பது அவசியம். அதற்கு கட்சியில் மா.செ.க்களையும் ஒ.செ.க்களையும் அதிக அளவில் உருவாக்குங்கள் என்றும், சேலத்தின் முதல்வராக மட்டுமே இருக்கும் அவர், தமிழகத்தின் முதல்வர் முகமாக மாற வேண்டும். அதன் மூலமே Read More,.,.,,,,,,,….,,,…..,,,…..