வீட்டை சுத்தமாக வைத்திருப்பதற்கு உப்பு பல வழிகளில் பயன்படுகிறது.
சமையலுக்கு தேவையான முக்கிய பொருட்களில் ஒன்று உப்பு. சாப்பாட்டுக்கு தேவையான சுவை கொடுப்பதில் அதன் பங்கு முக்கியமானது. உணவு மட்டுமல்லாமல் வேறு சில வேலைகளுக்கும் உப்பு உங்களுக்கும் உதவும். வீட்டை அழகாக, சுத்தமாக வைத்துக்
கொள்ள நினைப்பவர்களுக்கு உப்பு பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். வீட்டில் உள்ள கறைகளை அகற்ற நீங்கள் விதவிதமான பொருட்கள் வாங்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உப்பு மட்டும் போதும். இது பல மேஜிக் செய்யக் கூடியது.
வீட்டை சுத்தமாக வைத்திருக்க உப்பை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
உங்கள் வீட்டில் அதிக எறும்புகள் இருந்தால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் அவற்றின் பாதையில் உப்பை வைப்பதுதான். இல்லையென்றால் எறும்புகள் அதிகம் இருக்கும் இடங்களில் உப்பு வைத்து விடுங்கள். சில நிமிடங்களில் எறும்புகள் தொல்லைகளில் இருந்து விடுபடலாம் Read More