கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31 உடன் முடிவடைய உள்ளது.
செப்டம்பர் முதல் தேதியில் இருந்து புதிய தளர்வுகள் அறிவிக்கப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும், சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
நாடு முழுவதும் மெட்ரோ ரயில் சேவை செப்டம்பர் முதல் தொடங்க வாய்ப்பு உள்ளது.
தனியார் பார்கள் திறக்க அனுமதி அளிக்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன. எனினும், அமர்ந்து மது அருந்துவதற்கு அனுமதி இல்லாமல், மதுபாட்டில்களை வாங்கிச்செல்லலாம் என்ற விதிமுறை கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது.ReadMore