ராகு – கேது பெயர்ச்சி பலன்கள் – மீனம்

மீனம்

பொறுமையும் சகிப்புத்தன்மையும் உடைய நீங்கள், காரணகாரியமில்லாமல் எதையும் செய்ய மாட்டீர்கள். கொடுத்துச் சிவந்த கைகளுடைய நீங்கள், பிறர் உழைப்பில் வாழ மாட்டீர்கள். எங்கும் எதிலும் புதுமையைப் புகுத்தும் நீங்கள், மனசாட்சிக்கு மாறாக நடந்துகொள்ளாதவர்.

ராகுவின் பலன்கள்

இதுவரை உங்கள் ராசிக்கு 4- ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் பழியையும், மனத்தில் ஒருவித அச்சத்தையும் உங்களுக்கும் தாயாருக்கும் இடைவெளியையும் ஏற்படுத்திய ராகு பகவான், இப்போது ராசிக்கு 3 – ம் வீட்டிற்கு வந்தமர்வதால் இனி உங்கள் வார்த்தைக்கு

மதிப்பு கூடும்.

ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் - துலாம் முதல் மீனம் வரை

சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன் – மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியில் நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தாயாருக்கு இருந்த நோய் குணமாகும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். வங்கிக் கடன் உதவியும் கிடைக்கும்.

பிள்ளைகளின் விருப்பு வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். அனுபவ அறிவாலும், யதார்த்தமான பேச்சாலும் வி.ஐ.பிகளின் மனத்தில் இடம் பிடிப்பீர்கள். பொதுக் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். சொந்த பந்தங்கள் மதிக்கும் அளவிற்கு நடந்து கொள்வீர்கள். துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே… நல்ல பதில் வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பழைய கடன் பிரச்னைகள் தீரும்.

ராகுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்

1.9.2020 முதல் 4.1.2021 வரை உங்கள் தன, பாக்கியாதிபதியான செவ்வாயின் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால், சகல பிரச்னைகளும் அகலும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையாரின் ஆதரவு பெருகும். அவருக்கிருந்த நோய் விலகும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள்.

5.1.2021 முதல் 12.9.2021 வரை, பூர்வ புண்ணியாதிபதியான சந்திரனின் ரோகிணி நட்சத்திரத்தில் ராகுபகவான் செல்வதால் பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். மகனுக்கு அயல்நாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தில் மாற்றம் செய்வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள்.

13.9.2021 முதல் 21.3.2022 வரை ராகுபகவான் உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் செல்வதால், உங்களைப் பற்றிய வதந்திகள் வரும். அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவீர்கள். உடல் உஷ்ணத்தால் வேனல் கட்டி, ஒற்றைத் தலை வலி வந்து போகும்.

அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளில் தாமதம் வேண்டாம். அக்கம் பக்கத்த்உ வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். சில நேரங்களில் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்திற்கேற்ப முதலீடு செய்வீர்கள். வேலையாள்கள் விசுவாசமாக நடந்து கொள்வார்கள். உங்கள் கருத்துகளுக்கு, புதிய முயற்சிகளுக்கு மறுப்புத் தெரிவிக்காத நல்லவர் பங்குதாரராக வர வாய்ப்பிருக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள்.

ரியல் எஸ்டேட், துணி, காய், கனி, ஏற்றுமதி – இறக்குமதி வகைகளால் ஆதாயமடைவீர்கள். சிலர் புதுக் கிளைகள் அல்லது தொழில் தொடங்குவீர்கள். அரசாங்கத்தால் இருந்த தொந்தரவுகள் விலகும். பெரிய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும்.

உத்தியோகத்தில், உயரதிகாரி இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பார். சக ஊழியர்கள் நேசக்கரம் நீட்டுவார்கள். பதவி உயர்வுக்காகக் காத்திருந்தவர்கள், நல்ல பொறுப்பில் அமர வாய்ப்பிருக்கிறது. உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கிலிருந்து விடுபடுவீர்கள்.

கேதுவின் பலன்கள்

இதுவரையில் உங்கள் ராசிக்கு 10-ல் அமர்ந்து அடுத்தடுத்த வேலைகளால் பதற்றத்தையும், அவமானங்களையும் சந்திக்க வைத்த கேதுபகவான் இப்போது ராசிக்கு 9-ல் வந்து அமர்கிறார்.

தள்ளிப் போன காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும். குடும்ப வருமானத்தை உயர்த்த அதிகம் உழைப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் திடீர் திருப்பங்கள் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் பலம், பலவீனம் அறிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

பணம் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் வாக்குறுதியை நிறைவேற்றிவிடுவீர்கள். புறநகர் பகுதியில் வீட்டு மனை வாங்க முயற்சி செய்வீர்கள். அதற்கான சகல வாய்ப்புகளும் கூடிவரும்.தந்தையாருடன் வீண் விவாதங்கள் வரக்கூடும். அவருக்கு ரத்த அழுத்தம் வந்து போகும். தந்தைவழிச் சொத்துகளைப் பெறுவதில் தடைகள் வந்து நீங்கும்.

ஆடம்பரச் செலவுகளைத் தவிர்க்கப் பாருங்கள். வழக்கில் வழக்கறிஞரைக் கலந்தாலோசித்து முடிவுகள் எடுப்பது நல்லது. கோயில் கும்பாபிஷேகத் திற்கு நன்கொடை வழங்குவீர்கள். அவ்வப்போது, கடந்த கால இனிய அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:

1.9.2020 முதல் 10.5.2021 வரை உங்களின் சுக சப்தமாதிபதியான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் கேதுபகவான் செல்வதால் எதிர்ப்புகள் அடங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பூர்விகச் சொத்தை மாற்றி, உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருக்கு வேலை கிடைக்கும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

தாயாரின் உடல் நலம் சீராகும். திருமணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள்; மனத்தில் தன்னம்பிக்கை பிறக்கும்.

11.5.2021 முதல் 16.1.2022 வரை உங்கள் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் கேது செல்கிறார். ஆகவே, பெரிய திட்டங்கள் நிறைவேறும்.

பாதியில் நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்கு வீர்கள். வங்கி லோன் கிடைக்கும். புது வேலைக்கு முயற்சி செய்தீர்களே… அதன் பொருட்டு நல்ல பதில் வரும். கௌரவப் பதவிகள் தேடி வரும். என்றாலும், எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகமாகும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்; வீண் பிரச்னைகள் எழலாம். சில நாள்கள் தூக்கம் குறையும். புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.

17.1.2022 முதல் 21.3.2022 வரை, கேதுபகவான் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால், புதிய முயற்சிகள் பலிதமாகும். தோற்றப் பொலிவு கூடும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். அரசால் அனுகூலம் உண்டு.

உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். சிலர் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். பழைய சரக்குகளைத் தள்ளுபடி விலைக்கு விற்றுத் தீர்ப்பீர்கள். குறைந்த லாபம் வைத்து விற்பதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகமாவார்கள். வேலையாள்களிடம் கறாராக இருக்க வேண்டாம்; அன்போடு அவர்களை வழிநடத்துங்கள்.

உத்தியோகத்தில் அவ்வப்போது ஒதுக்கப் பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம். அதே நேரம், சக ஊழியர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். ஆகவே, மற்றவர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம். அலுவலக ரகசியங்களை வெளியே பகிர வேண்டாம். சிலருக்கு, வேறு சில நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் வரும்.

மொத்தத்தில் இந்த ராகு – கேதுப் பெயர்ச்சியில் ராகுவால் திடீர் யோகமும், செல்வாக்கும் கிடைக்கும். எனினும் கேதுவால் அலைச்சலும், செலவினங்களும் வந்து செல்லும்.

பரிகாரம்:

நன்னிலம் அருகில் இருக்கும் தலம் ஸ்ரீவாஞ்சியம். இந்த ஊரில் ராகுவும் கேதுவும் சேர்ந்து காட்சி தரும் அரிய கோலத்தைத் தரிசிக்கலாம். இவ்வூரில் அருளும் சிவனாரை வழிபட்டு வாருங்கள்; ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள்; தடைகள் அனைத்தும் உடைபடும்.

%d bloggers like this: