இயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்வது எப்படி?

ஹேர் கலரிங் செய்ய அழகு நிலையத்தில் போய் செய்தால் பணம் மற்றும் நேரம் அனைத்தும் செலவாகும். அதை விட முக்கியமான ஒன்று அதில் அதிகமாக இரசாயனப் பொருட்கள் கலந்திருக்கும். இயற்கையான முறைகளை பயன்படுத்தினால் தலைமுடி வண்ணமாக மாறுவதுடன் நேரம் மற்றும் பணம் தடுத்து தலை முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

ஹேர் கலரிங் செய்ய தேவையான பொருள்: மருதாணி பொடி – 50 கிராம், தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் – 50 மி.லி.
செய்முறை: மருதாணி பொடிவுடன், தண்ணீர் சேர்க்காமல் அரைத்த பீட்ரூட் ஜூஸ் மற்றும் டீ டிகாஸன் ஆகியவற்றை சேர்த்து மிக்ஸ் செய்துக் கொள்ளவும். அந்த கலவையை 3 மணி நேரம் அதை அப்படியே வைக்கவும்.

கருமையான கூந்தலை பெற – தேவையான பொருட்கள்: கொக்கோ தூள் – அரை கப், தேன் – 1 டீஸ் பூன், ஆப்பிள் சாறு வினிகர் – 1 டீஸ் பூன், சூடான தண்ணீர் – தேவையான அளவு.

செய்முறை: கொக்கோ தூள், தேன், ஆப்பிள் சாறு வினிகர், சூடான தண்ணீர் மூன்றையும் சேர்த்து கலவை செய்து 10 நிமிடம் ஊற வைக்கவேண்டும். பின்னர், அந்த கலவையை தலையில் தேய்த்து சுமார் அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் தலைக்கு குளித்தால் உங்கள் முடி இயற்கையான அழகை பெரும்.

தினசரி குளிக்கும் பொது நாம் எலுமிச்சை சாறை தேய்த்து குளித்துவந்தால் வெறும் 5 நாள்களில் நமது தலைமுடியின் நிறம் மாறும். கெமோமில் தேயிலை-யை தினசரி தலையில் குளிக்கும்போது நீங்கள் உபகோகிக்கும் ஷாம்புவுடன் தேய்த்து வந்தால் நமது தலைமுடியின் வண்ணம் மாறும்.

%d bloggers like this: