திருஷ்டி கழிப்பதில் எலுமிச்சை ஏன் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா….?

எலுமிச்சை பழத்தை சாஸ்திரங்கள் ‘தேவ கனி’ என்று விவரிக்கிறது. அதனால், தான் தாந்த்ரீக சாஸ்திரத்தில் எலுமிச்சை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மகா சக்தியான ஆதி சக்திக்கு எலுமிச்சை மாலை கூட போடப்படுகிறது. தீய சக்திகளை துரத்தும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.

எலுமிச்சை ஈசனின் வடிவம் என்றால், அதில் உள்ள மஞ்சள் சக்தியின் வடிவம். மொத்தத்தில் எலுமிச்சையில் சிவ – சக்தி சங்கமிப்பதாக சொல்லப்படுகிறது. அதனால் தான் நாம் எங்காவது வெளியில் சென்றாலோ அல்லது வேறு ஏதேனும் பயணம் மேற்கொண்டாலோ, தீய சக்திகளை அகற்ற உடன் எலுமிச்சையை எடுத்துச் செல்வது நல்லது.

வாகனங்களில் எலுமிச்சை – மிளகாய் கட்டப்படுவதை பார்த்து உள்ளோம்.

எலுமிச்சையை வண்டிகளில் கட்டுவதன் ஆன்மீக காரணம்: ஏதேனும் நல்ல காரியத்திற்கு வண்டியில் செல்லும் போது நமக்கும் வண்டிக்கும் சேர்த்து எலுமிச்சையை சுற்றி போட்டு, நான்காக வெட்டி நான்கு திசைகளிலும் வீசுகிறார்கள். நான்கு திசைகளில் இருந்தும் எந்த கெட்ட சக்தியும் நம்மை நெருங்கிவிடக் கூடாது என்பதற்காகத் தான் நான்கு மூலையிலும் வீசுகிறார்கள். மேலும் வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி நாட்களிலும் எலுமிச்சை கட்டுகிறார்கள்.

தீய சக்திகளை விரட்ட எலுமிச்சையானது காரில் மட்டும் அல்ல கோயில்களில் கூட, திரி சூலம், மூர்த்திகள், யாக குண்டம் மற்றும் கதவின் இரு புறங்களிலும் வைக்கப்படுகிறது. கண் திருஷ்டியை நீக்கி பாதுகாப்பை அளிக்க மிளகாயுடன் சேர்த்து பயன்படுத்தப்படுகிறது.

%d bloggers like this: