தடை செய்யப்பட்ட செயலிகள் எவை எவை? 118 செயலிகளின் பட்டியல் இதோ!

தமிழ்நாடு உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் பப்ஜி (PUBG – PlayerUnknown’s Battlegrounds) எனப்படும் இணைய விளையாட்டு வேகமாகப் பரவி வருகிறது. மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரையும் அடிமையாக்கி, அவர்களின் எதிர்காலத்தை இந்த விளையாட்டு கேள்விக்குறியாக்கியது

பப்ஜி விளையாட்டு என்பது மெய்நிகர் போருக்கு ஒப்பானது. இந்த விளையாட்டை விளையாடத் தொடங்குபவர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை சேகரித்துக் கொண்டு அவற்றின் மூலம் எதிரிகளை அழிக்க வேண்டும். பப்ஜி விளையாட்டை ஆடத் தொடங்கும் ஒருவர் களத்தில் உள்ள அனைவரையும் சுட்டுக் கொலை செய்தால் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். இந்த விளையாட்டை விளையாடும் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் கொலைகளை செய்வதுதான் சாதனை என்ற உணர்வு ஏற்படுகிற இந்த நிலையில், சீனா இந்தியாவில் அறிமுகம் செய்துள்ள பல செயலிகளின் மூலமாக, இந்திய அதிகாரிகள் மற்றும் மக்களின் செயல்பாடுகளை கவனித்து, தகவலை திருடுவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியானது. இந்நிலையில், எல்லையில் ஏற்பட்ட பிரச்னையை வைத்து சீன செயலிகளை முடக்க மத்திய அரசு திட்டம் தீட்டியது.

இதன் முதற்கட்டடமாக ஏற்கனவே ஹெலோ, யூசி பிரவுசர், டிக் டாக் போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட சீன செயலிகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பைடு, பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளை மத்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்திய இறையாண்மைக்கும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் இருந்தால் நடவடிக்கை என மத்திய அரசு விளக்கம்.

தடை செய்யப்பட்ட 118 செயலிகளில் பட்டியல் இதோ

%d bloggers like this: