அண்ணா அறிவாலயம் வந்த பிரசாந்த் கிஷோர்! வேட்பாளர் சர்வே! வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணி!

சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கான வியூகத்தை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோரின் ஐ பேக் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. திமுகவின் வேட்பாளர் பட்டியல் தொடங்கி கூட்டணி லாபி வரை பல்வேறு விஷயங்களில் ஐபேக் தனது சேவையை வழங்கி வருகிறது. கூட்டணி தொடர்பாக ஏற்கனவே ஒரு சர்வே எடுத்து அதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் பிரசாந்த் கிஷோர் நேரடியாக

வழங்கியுள்ளார். அந்த சர்வேயின் படி தமிழகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி கண்டிப்பாக கூட்டணிக்கு அவசியம் என்று ஸ்டாலினிடம் கன்வே செய்யப்பட்டுள்ளதுஇது தவிர ஒரு சில கட்சிகளால் திமுகவிற்கு தேர்தலில் ஆதாயம் இல்லை என்றும் எனவே அந்த கட்சிகளை கூட்டணியில் இருந்து கழட்டிவிட வேண்டும் என்றும் ஐ பேக் சர்வே ஸ்டாலினிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.

தற்போதுள்ள திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள், கடந்த முறை சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்புகளை இழந்தவர்கள், இந்த முறை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற வாய்ப்புள்ளவர்கள் என்று ஒரு பட்டியலை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் உத்தேச வேட்பாளர் பட்டியலாக ஐபேக் டீமிடம் திமுக தலைமை சமர்பித்தது. இதனை அடிப்படையாக வைத்து தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்கள் என்று உத்தேசிக்கப்படும் நபர்கள் குறித்து சர்வே எடுத்துள்ளது ஐ பேக் டீம். அந்த சர்வே முடிவுகள் இறுதி செய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் பிரசாந்த் கிஷோர் சென்னை வந்துள்ளார்.

வழக்கமாக ஸ்டாலின் வீட்டில் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பு நடைபெறும் நிலையில் இந்த முறை அண்ணா அறிவாலயத்திற்கு பிரசாந்த் கிஷோரை அழைத்துச் சென்று இருக்கிறார்கள். முன்பெல்லாம் பிரசாந்த் கிஷோர் உடனான ஆலோசனையின் போது ஸ்டாலின், சபரீசன், உதயநிதி உள்ளிட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஒரு சில முறை கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி போன்றோர் பிரசாந்த் கிஷோருடனான ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர். ஆனால் நேற்று முன் தினம் தான் முதல் முறையாக திமுக பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் துரைமுருகன் தொடங்கி ஆ.ராசா வரை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சுமார் 10 பேர் வரை பிரசாந்த் கிஷார் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக சொல்கிறார்கள்.

இந்த ஆலோசனைக்கு முன்னரே வேட்பாளர்கள் தொடர்பான சர்வேயை ஸ்டாலினிடம் ஐ பேக் டீம் கொடுத்துள்ளது. எனவே அதனை அடிப்படையாக கொண்டே இந்த ஆலோசனை நடைபெற்றதாக சொல்கிறார்கள். அந்த சர்வேயின் படி தற்போது திமுக எமஎல்ஏக்களாக உள்ள சுமார் 50 பேர் தொகுதிகளில் பெரிய அளவில் நலத்திட்ட உதவிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்று கூறப்பட்டுள்ளத. குறிப்பிட்டு சொல்லக்கூடிய ஒரு சிலர் மட்டுமே தொகுதி மக்களுடன் நெருக்கமாக இருப்பதாகவும் அவர்களின் அன்பை பெற்றுள்ளதாகவும் அந்த சர்வே முடிவு கூறுவதாக சொல்கிறார்கள்.

குறிப்பாக திமுகவின் மூத்த தலைவர்களின் வாரிசுகள் யாருமே எம்எல்ஏ பதவியில் சிறப்பாக செயல்படவில்லை என்பதை வெளிப்படையாகவே ஐ பேக் டீம் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறுகிறார்கள். அன்பில் மகேஷ், டி.ஆர்.பி ராஜா, பழனிவேல் தியாகராஜன் போன்ற இளம் எம்எல்ஏக்கள் சமூக வலைதளங்களில் மட்டுமே ஆக்டிவாக இருப்பதாகவும் தொகுதியிலும் சரி களத்திலும் சரி இவர்கள் செயல்பாடு ஜீரோ என்று ஐ பேக் சர்வே கண்டுபிடித்துள்ளது. இதே போல் மேலும் சில சீனியர் எம்எல்ஏக்களும் கூட மக்களிடம் ஆதரவை இழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம் எம்எல்ஏக்கள் மெய்யநாதன், அகஸ்டின், கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், சேகர் பாபு போன்றோர் தங்கள் தொகுதிகளில் சிறப்பான பணிகளை மேற்கொண்டுள்ளதாகவும் மக்களின் ஆதரவை தொடர்ந்து தக்க வைத்துள்ளதாகவும் வெளிப்படையாக பாராட்டப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இது தவிர திமுக கடந்த முறை சொற்ப வாக்குகளில் தோல்வி அடைந்த தொகுதிகளில் அவர்களுக்கு ஆதரவாக அனுதாபம் நிலவுவதாகவும் எனவே இந்த முறை அவர்கள் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாகவும் சர்வே தெரிவித்துள்ளது. இதே போல் திமுகவில் புதுமுகங்களாக அறியப்படும் உத்தேச வேட்பாளர்கள் சிலர் கட்சிக்காரர்களுக்கே தெரியாதவர்களாக இருப்பதாகவும், இளைஞர் அணி நிர்வாகிகள் என்கிற ஒரே காரணத்திற்காக அவர்கள் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களின் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலின்நடத்திய ஆலோசனையின் படி புதிததாக உத்தேச வேட்பாளர் பட்டியரை தயார் செய்வது என்று முடிவெடுத்துள்ளதாகவும், அதற்கு பிரசாந்த் கிஷோரின் சர்வே ரிப்போர்ட்டை பயன்படுத்திக் கொள்வது என்று முடிவு செய்துள்ளதாகவும் கூறுகிறார்கள்.

%d bloggers like this: