வெரிகோஸ் வெயின் ( நரம்பு சுருட்டல்) சரியாக அருமையான கேரள வைத்தியம்!

7 நாள் மட்டும் இதனை நீங்கள் பயன்படுத்தி பாருங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய வெரிகோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் முற்றிலுமாக குணமாகிவிடும்.

அதிக நேரம் நின்று கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும், உட்கார்ந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கும் அதிகமான அழுத்தம் கால்களில் ஏற்படுவதால் இந்த நரம்பு சுருட்டல் ஏற்படும்.

இதனை சரி செய்ய கூடிய அற்புதமான கேரள வைத்தியத்தை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

1. கருப்பு எள் 3 ஸ்பூன்

2. காய்ச்சாத பால் அரை டம்ளர்.

செய்முறை:

1. முதலில் கருப்பு எள்ளை எடுத்து கொள்ளவும்.

2. அதனை ஒரு பௌலில் போட்டு காய்ச்சிய பாலை ஊற்றி ஊறவைக்கவும்.

3. இந்த எள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் ஊற வேண்டும்.

4. ஊறிய பிறகு அதனை மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். பாலே போதும்.

5. அரைத்த விழுதை ஒரு பௌலில் போட்டுக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

1. இந்த பேஸ்ட்டை எங்கு நரம்பு சுருட்டல் உள்ளதோ அங்கு நன்றாக மேல் நோக்கி தேய்த்து விடவும்.

2. மேல்நோக்கி தேய்க்கும் பொழுது ரத்த ஓட்டமும் மேல் நோக்கி பாயும். அதனால் உங்களுக்கு வெரிகோஸ் வெயின் சீக்கிரமாக குணமடையும்.

3. நன்கு பற்று போல் போடவும்.

4. 1லிருந்து 2 மணி நேரம் வரை வைத்திருக்கலாம் அல்லது இரவு முழுவதும் வைத்திருக்கலாம் மிகவும் நல்லது.

5. இது நன்கு காய்ந்தவுடன் சாதாரணமான தண்ணீர் கொண்டு கழுவி விடவும்.

6. இது நன்கு காய காய உடலில் சீரான இரத்த ஓட்டம் பாயும்.

மேலும் ஒரு நாளைக்கு நீங்கள் எட்டு மணி நேரம் நின்று கொண்டு வேலை பார்ப்பவர்கள் என்றால் கொஞ்சம் குறைத்து கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும்பொழுது சம்மணங்கால் போட்டு உட்காரவும்.

மேலும் நீங்கள் படுத்து உறங்கும் பொழுது மூட்டுகளின் அடியில் இரண்டு தலையணைகளை வைத்து காலை மேல்நோக்கி இருக்குமாறு வைத்து தூங்கலாம்.

இப்படி ஒரு வாரம் செய்து பாருங்கள் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும் வெரிகோஸ் வெயின் என்கின்ற நரம்பு சுருட்டல் சீக்கிரமாக குணமடைந்து விடும்.

%d bloggers like this: