இனி கண்ணாடிய தூக்கி போடுங்க..முப்பதே நாட்களில் உங்கள் பார்வை குறைபாட்டை தீர்க்கும் சிறந்த வீட்டு வைத்தியம்!!!

இன்று நாம் பயன்படுத்தும் லேப்டாப், மொபைல், டிவி ஆகியவை பலரிடத்தில் கண் குறைப்பாட்டை ஏற்படுத்துகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாரபட்சமே இல்லாமல் இதனால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் நாளடைவில் கண்ணாடி அணியும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு விடுகின்றனர். ஆனால் இதில் விஷயம் என்னவென்றால் கண் குறைப்பாட்டை சரி செய்ய கண்ணாடி ஒரு நிரந்தர தீர்வாக இருக்காது.

கண் பார்வையை சரி செய்ய இயற்கை முறையில் பல வழிகள் உள்ளன. இன்று நாம் பார்க்க இருக்கும் குறிப்பானது முப்பதே நாட்களில் உங்கள் கண் குறைப்பாட்டை சரி செய்யும் ஒரு அற்புதமான தீர்வாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இதன் சிறப்பு என்னவெனில் கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வயதாக ஆக ஏற்படும் கண் குறைபாடு ஆகிய அனைத்தையும் இது குணப்படுத்தும்

இந்த மருந்து செய்வதற்கு முதலில் நமக்கு கடுக்காய் தேவை. இது நாட்டு மருந்து கடைகளில் உங்களுக்கு கிடைக்கும். கடுக்காயில் இரண்டு வகைகள் உள்ளன. அவை இரண்டையும் நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். கடுக்காய் மிகவும் கடுமையாக இருக்கும். எனவே முதலில் அதனை உரலில் போட்டு இடித்து மேல் இருக்க கூடிய தோலை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதன் உள்ளே இருக்கும் பருப்பு நமக்கு தேவையில்லை.

உரலில் தட்டிய பின் அதனை மிக்ஸி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து சலித்து எடுக்கவும். இந்த பொடியில் மூன்று தேக்கரண்டி அளவு ஒரு ஈரம் இல்லாத கண்ணாடி பாட்டிலில் சேர்க்கவும். கூடவே நெல்லி முள்ளியில் மூன்று தேக்கரண்டி சேர்க்கவும். இதுவும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இரண்டையும் நன்றாக கலந்து மூடி போட்டு வைத்து கொள்ளலாம்.

குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. எத்தனை நாட்கள் ஆனாலும் கெடாது. இப்போது மருந்து தயாராக உள்ளது. இதனை தினமும் ஐந்து கிராம் அளவு எடுக்க வேண்டும். காலையில் 2 1/2 கிராம், இரவு 2 1/2 கிராம் என எடுக்கலாம். காலையில் எடுக்கும் போது வெறும் வயிற்றில் எடுக்க வேண்டும். இரவு வேலையில் எடுக்கும் போது உணவிற்கு பிறகு எடுக்க வேண்டும்.

இந்த மருந்தை தேன் அல்லது வெதுவெதுப்பான நீரில் கலந்து உட்கொள்ளலாம். இதனை தொடர்ந்து முப்பது நாட்கள் சாப்பிட்டு வர நிச்சயமாக உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். முதல் பதினைந்து நாட்களிலே ஒரு மாற்றத்தை நீங்கள் உணரத் தொடங்குவீர்கள். நிச்சயமாக இதனை முயற்சி செய்து பாருங்கள்.

%d bloggers like this: