உடலானது பல வகைபட்ட உயிரணுக்களால் உருவாக்கப்பெற்றது. இயல்பாகவே உடலில் உள்ள உயிரணுக்கள் பிரிந்து, வளர்ந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள தேவையான அளவுக்கு உயிரணுக்களைப் புதிதாக உருவாக்குகிறது.
சில வேளைகளில், உடலுக்குத் தேவையற்ற பல புதிய உயிரணுக்கள் தோன்றுகின்றன. உடலில் உள்ள பழைய வயதடைந்த உயிரணுக்கள், இறக்க வேண்டிய நேரத்தில் இறந்து வெளியேறாமல் உடலிலேயே மிகுபடுகின்றன.
இவ்வாறான அதிகப்படியான உயிரணுக்கள், கழலை அல்லது கட்டி எனப்படும் இழையங்களின் கூட்டை ஏற்படுத்துகிறது.
தீங்கில்லா கட்டிகளைப் பொதுவாக உடலிலிருந்து நீக்கி விடலாம். பெரும்பாலான நிகழ்வுகளில் அவற்றை நீக்கிய பின்பு, அவை மீண்டும் தோன்றுவது இல்லை.
புற்றுநோய் ஒரு தொற்றுநோய் அல்ல. ஆண்களுக்கு நுரையீரல், வயிறு, குடல், உணவுக்குழாய், ப்ராஸ்ட்ரேட் சுரப்பிகளிலும், பெண்களுக்கு மார்பகம், நுரையீரல், வயிறு, குடல், கர்ப்பப்பை வாய் ஆகியவற்றிலும் அதிகமாக புற்றுநோய் வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
புற்று நோயின் அறிகுறிகள்
- குரலில் திடீர் மாற்றம், தொடர் இருமல், குரலில் கரகரப்பு.
- முழுங்குவதில் தொடர் சிரமம், தொண்டையில் அடைப்பு போல் தோன்றுதல்.
- நாக்கை அசைப்பதில் சிரமம்
- மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றம். (உதாரணம்: தொடர் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப் போக்கு)
- சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம்.
உடலில் கட்டி தோன்றுதல். புற்றுநோயில் ஆரம்ப கட்டத்தில் வலி ஏற்படுவதில்லை. பரவிய பிறகுதான் வலி ஏற்படும். - உடலில் உள்ள மச்சங்கள் அல்லது மருக்கள் பெரிதாகுதல், அல்லது அவற்றின் நிறத்தில் மாற்றம்.
- காரணமில்லாமல் எடை குறைவு.
- பெண்களுக்கு மார்பகங்களில் கட்டி, மாதவிடாயின் போது இயல்பைவிட அதிக ரத்தப்போக்கு, இறுதி மாதவிடாய் (post menopause) நின்ற பிறகும் ரத்தப்போக்கு.
புற்றுநோய்யை ஏற்படுத்தும் சில உணவுகளைப் பற்றி விரிவாக பார்ப்போம்
பார்பிக்யூ உணவுகள்
இறைச்சியானது பார்பிக்யூ வடிவில் சமைக்கப்படும் போது அது கார்சினோஜெனிக் பொருளான PAH என்னும் நச்சுப்பொருளை வெளியிடுகின்றன. இது புற்றுநோய் ஏற்பட முக்கிய உணவாக இருக்கிறது. டோஸ்ட்களில் கூட இந்த ஆபத்து உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
ஊறுகாய்
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக உப்பு உள்ள பொருட்கள் வயிறு புற்றுநோயை உண்டாக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளன. புற்றுநோய் ஏற்பட அதிகளவு உப்பு சேர்க்கப்பட்ட புளிப்பு உணவுகளும், ஊறுகாய், புகையில் சமைக்கப்பட்ட மீனும் காரணமாக உள்ளது என சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இறைச்சிகள்
இறைச்சிகளை பதப்படுத்தும்போது நைட்ரைட்டுகள் உருவாகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. இதனால் குடல் மற்றும் வேறுசில புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
மதுபானம்
ஆல்கஹாலின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகரித்துக் கொண்டே வரும். மது அளவோடு அருந்தினால் எந்தவித பிரச்சினையும் கிடையாது.
ட்ரான்ஸ் கொழுப்புகள்
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் ட்ரான்ஸ் கொழுப்புகள் பல மோசமான நோய்களை உண்டாக்கவல்லது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த உணவுகளை சாப்பிடுபவர்கள் 78 சதவீதம் புற்றுநோயால் உயிரிழந்துள்ளனர் என்று மருத்துவ ஆராய்ச்சி மையம் புள்ளி விவரங்களை அறிவித்துள்ளது.
சோடா
சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்கள் நிச்சயம் உடல் எடையை அதிகரிக்கச்செய்யும். எடை அதிகரிப்பு புற்றுநோய் ஏற்படுவதற்கான முக்கியமான காரணிகளாக அமைகின்றன. உடலில் கொழுப்புகள் அதிகரிக்கும் போது அது அதிகளவு ஈஸ்ட்ரோஜனை சுரக்க வைக்கிறது. இதனால் மார்பக புற்றுநோய், புரோஸ்ட்ரேட் புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.
பாப்கார்ன்
மைக்ரோவேவ் ஓவனில் தயாரிக்கப்பட்ட பாப்கார்ன்கள் அடைக்கப்பட்டு விற்கப்படும் பொது அதில் PFOA என்னும் பொருள் உள்ளது. இது கல்லீரல், கணையம் போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.
தக்காளி சாஸ்கள்
கேன்களில் தக்காளி அடைக்கப்படும்போது அதில் உள்ள அமிலங்கள் BPA உடன் வினைபுரிந்து அதிக BPA வை உற்பத்தி செய்கிறது. எனவே அடைக்கப்பட்ட தக்காளி மற்றும் சாஸ்களை ஒருபோதும் சாப்பிடக் கூடாது.