மொத்தம் 3 பேர்.. அதிமுகவின் அதிரடி ஆக்‌ஷன்.. இவர்களை மீறி ஒரு “எஸ்எம்எஸ்” கூட அனுப்ப முடியாதாமே!

அதிமுகவின் 3 அரசியல் ஆலோசகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

அதிமுகவின் 3 அரசியல் ஆலோசகர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை: அதிமுகவின் மொத்த கட்டுப்பாடும் “எஸ்.எம்.எஸ்.” டீமிடம் போயுள்ளது.. இவர்கள் எல்லாம் யார்? நாங்க எதுக்கு இவங்களுக்கு கட்டுப்பட வேண்டும் என்று அதிமுக சீனியர்கள் கொந்தளித்து

வருகிறார்கள்.. அதேசமயம், புதிதாக ஃபார்ம் ஆகி உள்ள இந்த எஸ்.எம்.எஸ். டீம் வருகையால், ரத்தத்தின் ரத்தங்களுக்கு புது தெம்பு பிறந்துள்ளது.. யார் இந்த எஸ்.எம்.எஸ். டீம்?

ஜெயலலிதா காலம் முதலே உளவுத்துறை ஐஜியாக இருப்பவர்தான் சத்தியமூர்த்தி.. சசிகலா குடும்பத்துடன் நெருக்கமானவர்.. ஒருவகையில் சொந்தக்காரர்களும்கூட.

அதனாலேயே இந்த பதவி தரப்பட்டதாக அப்போது கிசுகிசுக்கப்பட்டது. முதல்வருடன் எப்போதுமே இணக்கமாக இருக்க வேண்டிய பொறுப்பு உளவுத்துறை ஐஜிக்களுடையது.

ரகசியங்கள்

முக்கிய தகவல்கள், ரகசியங்கள், எதுவாக இருந்ததாலும், அதை உடனே முதல்வரிடம் தெரிவிக்க வேண்டும்.. அப்படி ஒரு வேலையை இவர் ஜெயலலிதா இருக்கும்போது சரியாகவே செய்தார் என்று தான் சொல்ல வேண்டும்.. கட்சி ரெண்டாக உடைந்து சேர்ந்த போதிலும், இவர்தான் பொறுப்பில் இருந்தார்.. சசிகலா பேச்சை எடுத்தாலே அவாய்ட் செய்யும் எடப்பாடியார், “முன்னாள் ஆகியும்” இவரை எப்படி இப்போது வரை நம்பி உள்ளார் என்ற ஆச்சரியம் வராமல் இல்லை.

சுனில்

அடுத்ததாக சுனில்.. இவர் திமுகவின் முன்னாள் ஆலோசகர்.. ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்தவர்.. இப்போது அதிமுகவுக்கு வேலை செய்து வருகிறாராம்.. ஸ்டாலினுடன் நெருக்கத்தில் இருந்த இவரை எப்படி எடப்பாடியார் இதற்கு அனுமதித்தார் என்பதே இன்னொரு ஆச்சரியமாக உள்ளது.. கார்ப்பொரேட் அரசியல் நம்ம தமிழ்நாட்டில் எடுபடாது என்று சொன்னதால், ஆரம்பத்தில் இவரை பெரிதாக எடப்பாடி தரப்பு கண்டுகொள்ளவில்லை.. ஆனால், இவரை அழைத்து வந்ததில் எடப்பாடியார் மகன் மிதுன் என்றும் ஒரு பேச்சு எழுந்தது. சுனிலை மிதுன் அழைத்து வந்தாலும், அவரது கட்டுப்பாட்டில்தான் இவர் வேலை பார்ப்பார் என்றும் கிசுகிசுத்தார்கள்.

எஸ்.எம்.எஸ்

இப்போது விஷயம் என்னவென்றால், இவர்கள் 3 பேர்தான் கட்சி வேலையை இழுத்து போட்டு கொண்டு செய்து வருகிறார்களாம்.. அதாவது சத்தியமூர்த்தி, மிதுன், சுனில்.. இவர்களுக்கு எஸ்.எம்.எஸ். என்ற அடைமொழியையும் உருவாக்கி வருகிறார்கள். அதிமுகவுக்குள் இரட்டை தலைமை விவகாரம் ஓடி கொண்டிருக்கிறது.. முதல்வர் வேட்பாளர் பிரச்சனையும் தலைதூக்கி உள்ளது.

அப்டேட்கள்

இதையெல்லாம் சரிப்படுத்தி, வியூகங்களை தீட்டி.. கள வேலைகளை முடுக்கி விடும் வேலையைதான் இந்த 3 பேர் கொண்ட டீம் கவனிக்கிறதாம்.. அதனால் முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவருமே இவர்களிடம்தான் எதையும் அப்டேட் செய்ய வேண்டும், நிர்வாகிகள் எதையுமே தன்னிச்சையுடன் செய்யக்கூடாது, பேசக்கூடாது என்ற ரீதியில் இவர்களின் போக்கு உள்ளதாம்.

பிரசாந்த் கிஷோர்

எப்படி பிரசாந்த் கிஷோர் என்ட்ரி, உதயநிதி கெடுபிடியால் திமுகவில் மூத்த தலைகள் அதிருப்தியில் உள்ளார்களோ, அதுபோலவே இந்த எஸ்.எம்.எஸ் டீமால் சீனியர்கள் சிலர் அப்செட்டில் உள்ளனர்.. “இவர்கள் எல்லாம் யார்? இவர்களுக்கு நாங்கள் கட்டுப்படுவதா? காலம் காலமாக அதிமுகவில் ஊறி வந்திருக்கிறோம், இப்போது வந்த இவர்கள் எங்களை அடக்குவதா?” என்று பொருமலும் உள்ளதாம்.

திமுக

திமுக அதிமுக இரண்டுமே இப்படி ஆலோசகர்கள் கையில் சிக்கியிருப்பதை தமிழக மக்களும் பார்த்துக் கொண்டுதான் உள்ளனர். சட்டசபைத் தேர்தல் முடிவுகள்தான் எந்த ஆலோசகர்கள் வெல்லப் போகிறார்கள் என்பதை காட்ட போகிறது..!

%d bloggers like this: