ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

எடை குறைதல்: ஒரு மணி நேரம் ஸ்கிப்பிங் பயிற்சி செய்தால் 1300 கலோரிகளை எரிக்க வாய்ப்புள்ளது. ஜாக்கிங் அல்லது நடைப்பயிற்சியுடன் ஒப்பிடும்போது ஸ்கிப்பிங் அதிக கலோரிகளை எரிக்க வல்லது.

தசைகள்: ஆரம்பத்தில் சில நாட்கள் ஸ்கிப்பிங் செய்த பிறகு உடல் வலியை உணரலாம். முன்பைவிட கை, கால் தசைகள் அதிகமாக வேலை செய்வதால் இந்த பிரச்சினை ஏற்படும். இருப்பினும் கை, கால்களில் உள்ள தசைகள் வலு வடைவதற்கு உதவும் முழு உடற்பயிற்சியாக இது அமையும்.

ஒருங்கிணைப்பு: கண்கள், மூளை மற்றும் தசைகள் ஒருங்கிணைந்து செயல்பட உதவும். தினமும் அரை மணி நேரம் ஸ்கிப்பிங் செய்வது அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்தும் என்றும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

எலும்பு அடர்த்தி: ஸ்கிப்பிங் செய்தபடி மேலும் கீழும் குதிக்கும்போது அனைத்து தசைகளும் தூண்டப்படும். அதனால் எலும்பு பலம் அதிகரிப்பதோடு எலும்புகளின் அடர்த்தியும் கூடும். எலும்புகளை சுற்றியிருக்கும் தசைகளும் பலப்படும்.

இதய ஆரோக்கியம்: ஸ்கிப்பிங் செய்வது சிறந்த கார்டியோ பயிற்சிகளில் ஒன்றாகும். இது இதய செயல்பாட்டையும், ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும். உடலில் ஸ்டெமினாவை அதிகரிக்க செய்து இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும்.

%d bloggers like this: