அரசின் சூப்பரான பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்.. எப்படி இணைவது.. தகுதி என்ன? 

இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் நிச்சயம் எழுந்திருக்கும். ஏனெனில் இது போன்ற நெருக்கடியான காலகட்டங்களில் நிச்சயம் சேமிப்பின் முக்கியத்துவத்தினை அறிந்திருப்போம். இன்று சேமித்தால் நம்முடைய முதுமை காலத்தினை நன்றாக கழிக்க முடியும் என்பதனையும் பலரும் உணர்திருப்போம்.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருக்கும் சிறந்த சேமிப்பு திட்டமானது, பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி தான்.

அதுவும் குறைந்த ரிஸ்க், அரசாங்க பாதுகாப்பு, கணிசமான வருவாய் கொடுக்கும் பாதுகாப்பான முதலீடும் கூட.

பிபிஎஃப் திட்டத்தின் அம்சம்

ஆக நீண்டகால நோக்கங்களுக்காக முதலீடு செய்ய நினைப்போருக்கு நிச்சயம் இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம் தான். ஏனெனில் முதலீட்டிற்கு பங்கம் இல்லாத சிறந்ததொரு முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டமானது 15 ஆண்டுகால திட்டமாகும். இதில் வரிச்சலுகையும் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைக்கிறது.

நீங்கள் இதற்கு தகுதியானவரா?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் இணைவதற்கு என்ன தகுதி? இந்தியாரான எந்தவொரு தனிப்பட்ட நபரும் இந்த கணக்கினை துவங்க தகுதியானவர் தான். என்ஆர்ஐ-களுக்கு இந்த கணக்கு தொடங்க அனுமதியில்லை. ஒரு வேளை இந்த கணக்கினை தொடங்கும்போது இந்தியாவில் இருந்து, பின்னர் வெளி நாடுகளூக்கு சென்றிருந்தால் அவர்கள் இந்த வைப்பு நிதி கணக்கு முதிர்வடையும் வரை தொடர்ந்து கொள்ள முடியும்.

இதே மைனர் குழந்தைகளுக்கு பெற்றோர் அல்லது பாதுகாவலரோ இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகளை தொடங்க முடியாது.

எவ்வளவு பங்களிப்பு செய்யலாம்? குறைந்தபட்சம் எவ்வளவு?

இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம் ரூ.500 செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் செலுத்திக் கொள்ளலாம். ஒரு ஆண்டில் அதிகபட்சம் 12 பங்களிப்புகள் இருக்கலாம். அதாவது 12 தவணைகளாக உங்களது பணத்தினை நீங்கள் செலுத்திக் கொள்ளலாம்.

சரி எப்படி இந்த கணக்கினை எப்படி தொடங்குவது?

அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகளும் தொடங்கிக் கொள்ள முடியும். குறிப்பாக தனியார் வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகளில் தொடங்கி கொள்ள முடியும். இதனை உங்களது வங்கி நெட் பேங்கிங்கிலும் தொடங்கிக் கொள்ள முடியும்.

என்னென்ன ஆவணங்கள் தேவை?

பார்ம் ஏ (FORM A)வினை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-A_%20(PPF%20OPENING).pdf). பதிவிறக்கம் செய்யப்பட்ட பார்ம், இதனுடம் அடையாள அட்டை, முகவரி சான்றிதழ், போட்டோ மற்றும் நாமினேஷன் பார்ம் (FORM E) (https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-E_(PPF%20NOMINATION).pdf) இதனையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட வங்கிக் கிளைகளில் கொடுக்கலாம்.

உங்கள் பிபிஎஃப் கணக்கினை ரிஜிஸ்டர் செய்ய?

நீங்கள் பிபிஎஃப் கணக்கினை தொடங்க கட்டாயம் ஒரு வங்கிக் கணக்கு வேண்டும். உங்களது இணைய வங்கியினை லாகின் செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள பிபிஎஃப் என்ற ஆப்சனை கிளிக் செய்யலாம். அதில் Relevant account மற்றும் minor account என்று காண்பிக்கும். அதில் உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களது விவரங்கள் நாமினி விவரங்கள், வங்கி விவரங்கள் அனைத்தும் கேட்கும்.

வித்தியாசப்படும்

அதில் உங்களது பான் எண்ணினையும் வெரிபை செய்து கொள்ளும். இதன் பிறகு நீங்கள் எவ்வளவு டெபாசிட் செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்கும். அதனை பூர்த்தி செய்த பின்னர் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒடிபி வரும். ஒரு முறை இந்த வெரிபிகேஷன் செய்யப்பட்ட பின்பு, உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கப்படும். சில வங்கிகளில் இந்த கணக்கினை தொடங்க ஹாட் காஃபிகளை கேட்கின்றன. இங்கு நாம் கூறப்பட்ட வழிமுறைகள் பொதுவானவையே. இது வங்கிகளுக்கு வங்கி சிறு வித்தியாசப்படுகின்றன.

பிபிஎஃப் பாஸ்புக்

உங்களது பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்கப்பட்ட பின்னர், உங்களுக்கு வங்கிகள் பாஸ்புக் கொடுக்கின்றன. இதன் மூலம் நீங்கள் உங்களது கணக்கில் எவ்வளவு தொகை உள்ளது என தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் கணக்கு தொடங்குபவர்கள் ஆன்லைனிலேயே உங்களது இருப்பு மற்றும் மற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

என்னென்ன வங்கிகள் இந்த சேவை வழங்குகின்றன?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி

ஐசிஐசிஐ வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா

பேங்க் ஆப் பரோடா

ஐடிபிஐ பேங்க்

பஞ்சாப் நேஷனல் வங்கி

கார்ப்பரேஷன் வங்கி

ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ்

பேங்க் ஆப் இந்தியா

அலகாபாத் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா

கனரா வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா

இந்திய வங்கி, யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா

தேனா வங்கி, விஜயா வங்கி

பேங்க் ஆப் மஹாராஷ்டிரா

ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா

ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர்

ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர்

இன் ஆக்டிவ் அக்கவுண்ட்

உங்களது கணக்கினை செயல்படுத்தாமல் இருந்து பின்னர் செயல்படுத்த வேண்டுமெனில் செயல்படுத்திக் கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட வங்கிகளிலோ அல்லது அஞ்சலகத்திலோ ஒரு எழுத்துபூர்வமான கோரிக்கையை கொடுக்க வேண்டும். அதோடு செயல்படாத ஒவ்வொரு ஆண்டிற்கும் 50 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். அதோடு செயலற்ற நிலையில் இருந்த அனைத்து ஆண்டுகளுக்கும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 500 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

கணக்கினை மற்றொரு வங்கிக்கு மாற்ற முடியுமா?

உங்களது பிபிஎஃப் கணக்கினை வங்கியில் இருந்து அஞ்சலகத்திற்கு மாற்றலாம். அல்லது ஒரு வங்கியின் கிளையிலிருந்து, அதே வங்கியின் மற்றொரு கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும்.

அதோடு கணக்கினை தொடங்கி 5 ஆண்டுகளுக்குள் மூடுவதற்கு அனுமதி இல்லை. ஆனால் அதன் பிறகு சில காரணங்களினால் கணக்கினை மூடிக்கொள்ளலாம். அக்கவுண்ட் ஹோல்டருக்கு உயிருக்கு ஆபத்தான நோய் உள்ளிட்ட சில காரணங்களினால் மட்டுமே மூடிக் கொள்ளலாம். இதற்காக நீங்கள் சரியான ஆவணங்களை சமர்பிக்க வேண்டியிருக்கும்.

பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால்?

ஒரு வேளை துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம். இதற்காக நீங்கள் பார்ம் ஜி (FORM G – https://retail.onlinesbi.com/sbi/downloads/PPF/FORM-G_(PPF%20DECEASED%20CLAIM).pdf) கொடுக்க வேண்டியிருக்கும்.

முதிர்வு காலம்

உங்களது பிபிஎஃப் கணக்கு தொடங்கி முதிர்வு அடைந்துவிட்டால், 15 வருடத்தின் நிதியாண்டின் முடிவில் க்ளைம் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு நீங்கள் ஜூன் 1, 2005 அன்று கணக்கினை தொடங்கினீர்கள் எனில், மார்ச் 31, 2006லிருந்து தான் உங்களது 15 வருடம் தொடங்கும். உங்களது கணக்கு முதிர்வடையும் நாள் ஏப்ரல் 1, 2021 ஆக இருக்கும்.

இடையில் எடுக்க முடியாதா?

இடையில் பணம் எடுக்க முடியாதா?

உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். உதாரணத்திற்கு ஜனவர் 1,2012ல் தொடங்கியிருந்தால் 2018 -19ம் நிதியாண்டில் இருந்து திரும்ப பெறலாம். எனினும் ஒரு பகுதி மட்டுமே திரும்ப பெற அனுமதிக்கப்படும். சில வங்கிகள் 5 ஆண்டுகளுக்கு பிறகும் பணம் எடுக்க அனுமதிக்கின்றன. சில 7 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதிக்கின்றன. அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது.

அதுவும் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கின்றன.

%d bloggers like this: