எப்போ பாரு இருமிக்கிட்டே இருக்கீங்களா?.. இந்த டீ குடிங்க..

குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு ஏற்படும் வறட்டு இருமல், சளி இருமல் ஆகியவற்றை குறைக்க அருமருந்து கசாயத்தின் செய்முறையை சென்னை வர்மா ஆயுர்வேத மருத்துவமனையின் தலைவர் டாக்டர் கவுதமன் குறிப்பிட்டுள்ளார்.

வறட்டு இருமல், சளி இருமல் போக்கும் கசாயத்தின் செய்முறை.. விளக்குகிறார் டாக்டர் கவுதமன்- வீடியோ

இதுகுறித்து டாக்டர் கவுதமன் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், எப்போதும் இருமிக் கொண்டே இருக்கிறீர்களா, இதோ இருமல் தீர கசாயத்தை சாப்பிட்டால் பறந்து போய்விடும். இந்த கொரோனா காலத்தில் நுரையீரல் மண்டல தொற்று நோய்களால் நிறைய பேர் அவதிப்படுகிறார்கள்.

நம் அருகில் இருப்பவர் தும்மினாலும் சரி இருமினாலும் சரி கிடுகிடுவென ஓடி போகும் நிலைதான் இப்போது உள்ளது. இந்த இருமல், தும்மல் நீர்த் துளிகளால் கொரோனா வந்துவிடுமோ என்ற பயம் ஏற்பட்டுள்ளது.

இருமல் குறைக்க

இருமலை குறைப்பதற்கான வழிமுறைகளை சொல்கிறேன். அதிலும் சாதாரணமாக ஏற்படுகிற இருமல், விஷக் காய்ச்சல்களால் ஏற்படும் இருமல் மற்றும் தேவையற்ற கபத்தினால் ஏற்படும் இருமல், குத்தி குத்தி இருமலை குறைக்க நமக்கு கைக் கொடுக்கும் அருமருந்து இருமல் தீர கசாயம்.

செம்முள்ளி

இந்த கசாயம் செய்ய தேவையான பொருட்கள்

  • செம்முள்ளி
  • கண்டங்கத்திரி
  • தூதுவளை
  • ஆடாதோடை
  • திரிகடுகு
  • இந்து உப்பு
  • தேன்

ஆரோக்கியம்

இவை அனைத்தையும் 3 கிராம் பொடிகளாக எடுத்து அவற்றை 300மில்லி தண்ணீரில் கலக்க வேண்டும். பின்னர் அதை நன்றாக கொதிக்க வைத்து அவை 100 மில்லியாக குறைக்க வேண்டும். பின்னர் வடிகட்டி தேவைப்பட்டால் தேன் கலந்து குடிக்கலாம். இவ்வாறு குடித்து வருவதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

இருமலை குறைக்கும் கசாயம்

தொற்றுகளால் ஏற்படும் இருமலை குறைக்க உதவும். இருமலில் இரு வகைகள் உண்டு. ஒன்று வறட்டு இருமல், பொதுவாக உடலில் ஏற்படும் சூட்டாலோ, தொற்றுகளாலோ, தொண்டையில் ஏற்படும் அழற்சிகளாலோ ஏற்படக் கூடியது வறட்டு இருமல். இன்னொன்று நுரையீரல் மண்டலத்தால் ஏற்படும் இருமல். குறிப்பாக கீழடுக்கு நுரையீரல் மண்டலத்தில் அளவுக்கு அதிகமாக சளிகள் சேரும்போது அதை வெளியே கொண்டு வர உடல் ஏற்படுத்தும் இருமல்.

கசாயம்

இந்த இரு வகையான இருமல்களுக்குமே இந்த கசாயத்தை குடிக்கலாம். குறிப்பாக இந்த மருந்து குழந்தைகளுக்கு மிகப் பெரிய அருமருந்து. அது போல் வயதானவர்களுக்கும் இது கொடுக்கலாம். மழை காலத்தில் நெஞ்சு சளியால் இருமல் ஏற்படும். அப்போது பச்சை நிறத்தில் சளி வந்துவிடும் சூழல் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கும் இந்த இருமல் தீர கசாயத்தை குடிக்கலாம்.

பிரச்சினைகள்

நுரையீரலில் உள்ள பிரச்சினைகள் படிப்படியாக குறையும். இந்த மருந்தை ஒவ்வொன்றையும் சம அளவு எடுத்து அதை துணியால் சலித்து அதனுடன் ஒரு சிட்டிகை இந்து உப்பு சேர்த்து தேன் கலந்து கசாயத்திற்கு பதிலாக சூரணமாகவும் சாப்பிடலாம். கர்ப்பப்பையில் அறுவை சிகிச்சை செய்த பெண்கள், மாதவிடாய் நின்ற பெண்களுக்கும் இருமல் ஏற்படும். அவர்கள் இந்த கசாயத்தையோ சூரணத்தையோ சாப்பிட்டால் இருமல் குறையும் என்றார்.

%d bloggers like this: