Daily Archives: செப்ரெம்பர் 19th, 2020

8 வடிவ நடைப்பயிற்சியின் விதிமுறைகளும், நன்மைகளும்

அனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.
உடற்பயிற்சி செய்வதற்கு வெளியே செல்ல முடியாத சூழலில், நிறைய பேர்

வீட்டுக்குள்ளேயே விதவிதமான உடற்பயிற்சிகளை செய்வதற்கு பழகி விட்டார்கள். மொட்டை மாடியிலோ, வீட்டின் முற்றத்திலோ 8 வடிவத்தில் கோடுகள் வரைந்து அந்த வட்டத்தை சுற்றி நடந்து நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும் அதிகரித்து இருக்கிறார்கள். அனைத்து வயதினரும் எளிமையாக மேற்கொள்ளும் பயிற்சியாகவும் இந்த 8 வடிவ நடைப்பயிற்சி அமைந்திருக்கிறது. இந்த நடைப்பயிற்சியை மேற்கொள்வது குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பார்ப்போம்.

Continue reading →

அதிமுக பொதுச்செயலாளர் ஓ.பி.எஸ்…? முதலமைச்சர் வேட்பாளர் இ.பி.எஸ்…? முடிவுக்கு வரும் மோதல்..!

அதிமுகவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே நிலவி வரும் பனிப்போர் விரைவில் முடிவுக்கு வரும் எனத் தெரிகிறது.

அதிமுக பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வமும், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியும் விரைவில் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டுவது பற்றி விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.

Continue reading →