உங்கள் வீட்டு பீரோவுக்கு மேல், இந்த ஒரு பொருளை வையுங்கள். பீரோக்குள் பணம் தானாக வந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.

பெரும்பாலும் எல்லோரது வீடுகளிலும் பீரோவில் தான் கட்டாயம் பணத்தை எடுத்து வைப்பார்கள். குறிப்பாக சில பேர் வீடுகளில் 500 ரூபாய், 1000 ரூபாய் காசுகளை வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால், அந்த காசு செலவாகாமல் அப்படியே இருக்கும். அது பத்திரமாக, இருக்க வேண்டும் என்று எண்ணி, பீரோவில் கொண்டுபோய்

வைத்தவுடன், அந்த காசை தேடி வீண் விரயச் செலவு வரும். அது மருத்துவ செலவாக இருக்கலாம். அல்லது தேவையில்லாத ஏதாவது ஒரு காரணத்திற்காக அந்தப் பணம் வீண்செலவு ஆகிவிடும். இப்படி இருக்கும் பட்சத்தில், அந்த வீட்டில் உள்ளவர்கள் அந்த பீரோவை ராசியில்லாத பீரோ என்று முடிவு செய்து விடுவார்கள்.

உங்களுடைய வீட்டு பீரோ ராசியான பீரோவாக இருக்க வேண்டுமா? அந்த பீரோவில் கட்டுகட்டாக பணம் சேரவில்லை என்றாலும், வைக்கின்ற பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க வேண்டுமா? பீரோவுக்குள் இருக்கக்கூடிய தங்க நகைகளை, நாம் போட்டு அழகு பார்க்க தான் வெளியே எடுக்க வேண்டும். அடகுவைக்க அல்ல. இதுபோன்ற பீரோவில் வைக்கும் பொருட்கள் பத்திரமாக இருக்க என்ன பரிகாரம் செய்ய வேண்டும், என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

முதலில் நிறைய பேருக்கு பீரோவின் மேல் தேவையற்ற பொருட்களை போட்டு வைக்கும் பழக்கம் இருக்கும். சில பேர் வீடுகளில் தேவையில்லாத நியூஸ் பேப்பரை கூட பீரோவின் மேல் அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படிப்பட்ட தேவையற்ற பொருட்களை முதலில் பீரோவின் மேல் வைப்பதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அடுத்ததாக பீரோவின் மேல் ஒரு நியூஸ் பேப்பரை சிலர் விரித்து வைப்பார்கள். அதில் ஒன்றும் தவறு கிடையாது. தூசி படியாமல் இருப்பதற்காக இப்படி செய்வார்கள். ஆனால் அந்த பேப்பரின் மேல் தூசு படிந்து பீரோவுக்கு பின்னாலும், சுத்தம் செய்யாமல், காலம் காலமாக அந்த பீரோவை, நகர்த்தாமல் ஒரே இடத்தில் இருக்கும். இது மிக மிக தவறு. இதேபோல் சுவற்றின், மூலையில் பீரோவை வைக்கும்போது, மிகவும் சுவற்றை ஒட்டியும் பீரோவை வைக்கக்கூடாது. சுவருக்கும் பீரோவுக்கும், கொஞ்சம் கேப் விடுங்கள்.

உங்க வீட்டு பீரோ எவ்வளவு தான் எடை அதிகமாக இருந்தாலும், மாதத்திற்கு ஒருமுறையாவது, பீரோவை நகத்தி, அதனுடைய மூலைமுடுக்குகளில் சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாதத்திற்கு ஒரு முறையாவது, பீரோவுக்கு மேலிருக்கும், நியூஸ் பேப்பரை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.

bero

அடுத்தபடியாக தினந்தோறும் இந்த ஒரு பரிகாரத்தை செய்து பாருங்கள். இதற்கு உங்களுக்கு தேவையான பொருட்கள் 1 வெற்றிலை, 3 கிராம்பு, 3 ஏலக்காய், 1 பட்டை, இதை அந்த வெற்றிலையில் வைத்து நூல் போட்டு கட்டி, பீரோவின் மேல் வைத்து விட வேண்டும். தினம்தோறும் காலை சுவாமி கும்பிடும் போது, இப்படி கட்டி பீரோவின் மேல் வைத்து விடவேண்டும். மறுநாள் அந்த வெற்றிலையில் இருந்து, மற்ற பொருட்களை எல்லாம் எடுத்துவிட்டு, வெற்றிலையை மட்டும் மாற்றி, மீண்டும் புதிய வெற்றிலை ஒன்றை எடுத்து, பொட்டலம் கட்டி வைத்து விட வேண்டும்.

vetrilai

வாடிய வெற்றிலையை கட்டாயம் பீரோவின் மேல் வைக்கக்கூடாது. வெற்றி தரும் வெற்றிலையின் வாசம், கிராம்பு, பட்டை, ஏலக்காயின் வாசம், மகாலட்சுமி அந்த இடத்தில் நிலைத்து நிற்கச் செய்யும். உங்கள் வீட்டில், உங்கள் வீட்டு பீரோவில் இருக்கக்கூடிய பணத்திற்கும், நகைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இந்தப் பொருட்களின் வாசமானது பாதுகாக்கும், என்பதில் சந்தேகமே கிடையாது.

pattai

வெற்றிலையை தினமும் மாற்ற போகிறீர்கள். அதன் உள்ளே வைக்கும் ஏலக்காய் பட்டை கிராம்பு இந்த பொருட்களை வாரத்திற்கு ஒருமுறை மாற்றிக்கொள்ளலாம். அதனுடைய வாசம் குறைய ஆரம்பிக்கும் போது, அந்த பொருட்களை மாற்றிக் கொள்ளுங்கள். அவ்வளவு தான். உங்கள் வீட்டுப் பீரோவும் ராசியாக மாற, நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை, செய்து பாருங்கள். கட்டாயம் நல்ல பலன் உண்டு

%d bloggers like this: