நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும்.

நினைத்தது உடனே நடக்க, வேண்டுதல்கள் உடனே பலிக்க, இந்த 1 பொருள் போதும். நடக்கவே நடக்காதுன்னு சொன்ன ஒரு விஷயத்தை கூட, இந்த பொருள் கிட்ட சொல்லிதா பாருங்களேன்! உடனே நடத்தி தரும்.

சூழ்நிலை காரணமாக சில விஷயங்கள் தொடர்ந்து நமக்கு தடைபட்டுக் கொண்டே இருக்கும். சில நல்ல காரியங்களை, தொடர்ந்து முயற்சி செய்து பார்த்து விட்டு, அது நடக்கவில்லை என்றதும், அந்த முயற்சியை சில சமயங்களில் நாம் கைவிட்டு இருப்போம். இதே போல்

இக்கட்டான சூழ்நிலைகளில், சில வேலைகளை நாம் செய்தே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும். ‘எப்படி தான் நான் இதைச் செய்து முடிக்க போகின்றேனோ!’ என்ற கவலையும் நம் மனதில் இருக்கும். இப்படிப்பட்ட பிரச்சினைகளுக்கெல்லாம் சேர்த்து ஒரு மேஜிக் பரிகாரம் உள்ளது.

எடுத்துக்காட்டிற்க்கு, யாருக்காவது நீங்கள் பணம் கொடுக்க வேண்டியதாக இருக்கும். அதுவும் அந்தப் பணத்தை பத்து நாட்களில் செட்டில் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். அப்படி அந்த பணத்தை கொடுக்காவிட்டால், கோர்ட் கேஸ் வரை பிரச்சினைகள் போவதற்கு கூட வாய்ப்பு இருக்கும். அப்படி இல்லை என்றால், அந்த கடன் பிரச்சனையால் உங்களுடைய பரம்பரைச் சொத்தை இருக்க வேண்டியதாக இருக்கும்.

எதிர்மறையோடு சொல்வதாக நினைக்க வேண்டாம்‌. இக்கட்டான சூழ்நிலையில் இருக்கும் போது, அந்தப் பிரச்சனையில் இருந்தும் கூட நம்மை தப்பிக்க வைக்க கூடிய சக்தி, இந்த பரிகாரத்திற்க்கு உண்டு என்பதற்காக சொல்லப்படும் உதாரணம்தான் இது. இதுபோன்ற கழுத்தை நெறிக்கும் சூழ்நிலையை, எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். உங்களுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் சரி, உடல் நிலை சரியாக, தேர்வில் வெற்றி பெற, தொழிலில் முன்னேற்றம் அடைய, குடும்பத்தில் சண்டை சச்சரவு நீங்க, இப்படி எதற்கு வேண்டுமென்றாலும் இந்த குறிப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதற்கு நாம் பயன்படுத்தப் போகும் பொருள், நாம் எல்லோரும் அறிந்த ஒரு பொருள்தான். பிரியாணி இலை. இந்த இலையைப் பற்றி நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். இருப்பினும், இந்த இலையை சரியான முறையில் எப்படி பயன்படுத்தினால், உடனடி பலனை அடைய முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாமா? முதலில் உங்களுக்கு பிரச்சனைகளின் மூலம், அதிகப்படியான மன அழுத்தம் இருக்கும். மன அழுத்தத்தைப் போக்க என்ன செய்வது? மன அழுத்தம் சரியாகி விட்டாலே, பாதி பிரச்சினை முடிந்து விடும் அல்லவா?

ஒரு பிரியாணி இலையை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கக்கூடிய மனக்கஷ்டத்தை அந்த பிரியாணி இலையில் எழுதி விடுங்கள். எடுத்துக்காட்டிற்கு, கடன் பிரச்சினையையே எடுத்துக் கொள்வோம். ‘எனக்கு இருக்கக் கூடிய கடன் பிரச்சனை தீர வழி கிடைக்க வேண்டும்’ என்று எழுதிவிட்டு, அந்த பிரியாணி இலையை நெருப்பில் எரித்துவிட வேண்டும்.

அந்த சாம்பலை ஒரு சிறிய கிண்ணத்தில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். பின்பு வீட்டிற்கு வெளியே அல்லது கொஞ்சம் உயரமான இடத்திற்கு சென்று, இந்த பிரியாணி இலை சாம்பளை பிரபஞ்சத்திடம் சேர்த்து விடுங்கள். அதாவது காற்றோடு காற்றாக ஊதி விட்டு விடுங்கள். அவ்வளவு தான்‌. உங்களுடைய வேண்டுதலை நிச்சயமாக பஞ்சபூதங்களும் ஏற்று, அந்த பிரச்சினைக்கான தீர்வை, இந்த பிரபஞ்சம் உங்களுக்கு கொடுப்பதோடு சேர்த்து, உங்களது மன அழுத்தையும் நீங்கும். இதை படிப்பவர்கள் எந்த அளவிற்கு நம்புவீர்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும், இது ஒரு மேஜிக் மாதிரிதான். உங்களுடைய மன அழுத்தம் கட்டாயம் குறையும் என்பதில் சந்தேகமே கிடையாது. இதில் நஷ்டம் அடைய எதுவுமே இல்லை. முயற்சி செய்து தான் பாருங்கள்.

இரண்டாவதாக, உங்களுக்கு தேவையான வேண்டுதலை, ஏதாவது ஒரு வேண்டுதலை மட்டும் மனதார இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு, பிரியாணி இலையை எடுத்து, அதில் உங்களுடைய வேண்டுதலை ஒரு வரியில் எழுத வேண்டும். அது எப்படி என்றால், உங்களுடைய வேண்டுதல் நிறைவேறி விட்டதாக, நேர்மறையாக எழுத வேண்டும்.

மூன்று மாதத்திற்குள் குறிப்பிட்ட ஒரு வேலையை செய்து முடிக்க வேண்டும் என்ற குறிக்கோள் உங்கள் மனதில் இருந்தால், அந்த மூன்று மாதத்திற்கு பின்பு அந்த வேலையானது நடந்து முடிந்துவிட்டதாக, நீங்களே கற்பனை செய்து கொண்டு, அந்த இலையில் எழுதிவிட வேண்டும். ‘நான் எடுக்கக்கூடிய இந்த முயற்சி கட்டாயம் வெற்றி ஆகிவிட்டது’ என்றபடி எழுதி கொண்டால் கூட போதும். ‘இத்தனை நாட்களுக்குள் கடன் பிரச்சனை தீர்ந்து இருக்கும். இத்தனை நாட்களுக்குள் இந்த வீட்டை கட்டி முடித்து இருப்பேன். இத்தனை நாட்களுக்குள், உடல்நிலை சரியாகி இருக்கும்.’ என்றவாறு நேர்மறையோடு எழுதவேண்டும் என்பது மட்டும் முக்கியம்.

அந்த இலையை உங்களது பர்ஸ்ஸிலோ அல்லது உங்களது ஹேண்ட் பேகிலோ வைத்துவிட மீண்டும். நீங்கள் அந்த இலையில் எழுதி வைத்திருக்கும் அந்த குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக முயற்சிகளை விடாமல் செய்து கொண்டே இருக்கவேண்டும். கட்டாயம் நீங்கள் அந்த இலையில் எழுதி வைத்த அந்த குறிக்கோள், அந்த குறிப்பிட்ட நாட்களுக்குள், வெற்றியடைய 90% வாய்ப்பு உள்ளது என்பதில் சந்தேகமே கிடையாது. நம்பிக்கை உள்ளவர்கள் தாராளமாக முயற்சி செய்து பார்க்கலாம்.

%d bloggers like this: