உங்களுக்குத் தெரியுமா? ஓட்டுநர் உரிமத்தையும் வாகன பதிவையும் ஆன்லைனிலேயே புதுப்பிக்கலாம்

தங்கள் ஓட்டுநர் உரிமத்தை ஆதார் அட்டை மூலம் ஆன்லைனில் புதுப்பிக்கலாம். இதன்மூலம் பழகுநர் உரிமம் பெறுதல், ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பித்தல், வாகனங்களைப் பதிவு செய்தல் (ஆர்.சி) மற்றும் இந்த ஆவணங்களில் முகவரி மாற்றுவது என அனைத்தையும் எளிதாகியுள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில், சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் தொழிநுட்ப அமைச்சகத்திற்கு ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி தொடர்பான ஆன்லைன் சேவைகளை ஆதார் அங்கீகார விதிகளின் கீழ் கொண்டு வருமாறு கடிதம் எழுதியிருந்தது.
ஓட்டுநர்கள் மற்றும் வாகன உரிமையாளர்களால் பெறப்பட்ட போலி உரிமங்கள் அல்லது ஆவணங்களை அகற்றும் நோக்கில் போக்குவரத்து அமைச்சகத்தின் முக்கிய திட்டமாக இது உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் தங்களின் பணிகளைச் செய்து முடிக்கவும் இது உதவும்.

https://sarathi.parivahan.gov.in/sarathiservicecov11/stateSelection.do?stCd=TN என்ற லிங்கில் சென்று மேற்கண்ட பணிகளை நீங்கள் எளிதாக வீட்டில் இருந்தே செய்து கொள்ளலாம்.

சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகத்தின் ‘நல்லாட்சிக்கான ஆதார் அங்கீகார விதிகள் 2020’ கூறியதாவது, பிற நிறுவனங்களின் உதவியைக் கோருவதன் மூலம் மத்திய அரசு ஆதார் அங்கீகாரத்தை அனுமதிக்கலாம். மேலும் இது தரவு கசிவதைத் தடுப்பது மட்டுமின்றி குடிமக்களின் வாழ்க்கையை எளிமையாக்குதல், அவர்களுக்கு சிறந்த முறையில் சேவைகளைச் செய்தல் உள்ளிட்டவற்றில் முக்கியத்துவம் அளிக்கும் என்றது.

ஓட்டுநர் உரிமங்களுக்கு ஆதார் கார்டை கட்டாயமாக்க 2018ல் போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் பின்னர், இந்த முடிவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டியிருந்தது. அதன் பின்னர் அடையாள ஆதாரமாக ஆதார் கார்டை தானாக முன்வந்து பயன்படுத்துவதற்கான திருத்த மசோதா 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

%d bloggers like this: