80 தொகுதிகள் லட்சியம்… 60 தொகுதிகள் நிச்சயம்… திமுகவை திணறடிக்க ஸ்கெட்ச் போடும் காங்கிரஸ்…!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே இருப்பதால் இப்போதிருந்தே ஒவ்வொரு கட்சியும் தயாராகிவருகின்றன. திமுக வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 பேரை

உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை திமுக ஒதுக்கும் என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது
இந்நிலையில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் தேர்தல் பணிகளை இரு மாதங்களுக்கே முன்பே தொடங்கிவிட்டது.

இந்த 80 தொகுதிகளிலிருந்து குறைந்தபட்சம் 60 தொகுதிகளைக் கேட்டு பெறுவது என்றும் காங்கிரஸ் கட்சி முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. கடந்த 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக 63 தொகுதிகளை ஒதுக்கியது போல, இந்த முறையும் கேட்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தலா 5 தொகுதிகளும் கன்னியாகுமரியில் 4 தொகுதிகளும் நீலகிரியில் 2 தொகுதிகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதேபோல ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதிகள் இடம்பெறும்படி காங்கிரஸ் கட்சி இந்தப் பட்டியலை தயாரித்துள்ளது

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 9 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில் தேனி தவிர்த்து மற்ற 8 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. அதுபோல வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் போட்டியிட்டு வெற்று பெறுவது என்பதில் காங்கிரஸ் கட்சி குறியாக உள்ளதாக் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

%d bloggers like this: