வாயுத்தொல்லையா..? இதனை மட்டும் குடித்து பாருங்க..!

வாயுத்தொல்லையால் அதிகம் சிரமப்படுகிறீர்களா.இந்த இரண்டு பொருட்கள் இருந்தாலே போதும். மூன்று நாட்களில் வாயுத்தொல்லையில் இருந்து நீங்கள் விடுபடலாம்.

தேவையான பொருட்கள்:

  • ஓமம் – 50 கிராம்
  • சீரகம் – 50 கிராம்

செய்முறை:

  • ஓமம் மற்றும் சீரகம் இரண்டையும் அடுப்பில் வைத்து மிதமான சூட்டில் சிறிதளவு வருத்துக் கொள்ள வேண்டும்.
  • வறுதத்தை எடுத்து ஆற வைத்து பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • இதனை நீங்கள் ஒரு டப்பாவில் போட்டு சேமித்து வைக்கலாம். தேவையான போது எடுத்து பயன்படுத்தலாம்.
  • தினமும் நன்கு சூடான நீரில்1 /4 டீஸ்பூன் அளவு போட்டு அதனை இளம் சூட்டில் பருக வேண்டும்.
  • சுவைக்காக வேண்டுமெனில் நாட்டுச்சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதனால் வாயுத் தொல்லைகள் நீங்கும்.

புளித்த ஏப்பம் வருதல் கட்டுப்படும். சீரகம் நமது உடலில் செரிமானத்தை அதிகப்படுத்தி வாயு தொந்தரவை கட்டுப்படுத்தும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொப்பை கரையும். மேலும் வயிற்று மந்தம் நீங்கும். குழந்தைகளுக்கு கொடுக்கும் பொழுது தண்ணீரை வடிகட்டி விட்டு அதனை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

%d bloggers like this: