அஜினோ மோட்டோ அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்.. அப்போ ஏற்படும் தீமைகளை தெரிஞ்சுக்கோங்க..!

அஜினா மோட்டோ என்பது கரும்பு மற்றும் மரவள்ளிக் கிழங்கு ஆகியவற்றின் ஊரல்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றது. இதன் வேதிப் பெயர் மோனோ சோடியம் குளுடோமேட் ஆகும்.

இன்றைய வேகமான உலகில் வெளியில் சென்று எதிர்படும் கடைகளில் சாப்பிடுவது மிகவும் சாதாரணமான விஷயம். அதுவும் வீடுகளிலேயே பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளையும் மற்றும் ரெடிமேட் உணவுகளையும் சாப்பிடுவது சகஜமாகி விட்டது. ஆனால், இந்த மாற்றத்துடன் விழிப்புணர்வும் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

கடைகளில் விற்கப்படும் ரெடிமேட் உணவுகளை இனிமேல் கூர்ந்து கவனியுங்கள். தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் வரிசையில் கண்டிப்பாக அஜினமோட்டோ இருக்கும். நூடுல்ஸ்களைத் தவிர அனைத்து விதமான உணவுப் பொருட்களிலும் அஜினமோட்டோ கலந்துள்ளது.

இன்று அஜினோமோட்டோ என்றப் பெயரே நிலைத்துவிட்டது. உலகளவில் அஜினோமோட்டோ நிறுவனம்தான் அதிகம் இதனைத் தயாரித்தாலும், வேறு பல நிறுவனங்களும் இதனை தயாரித்து வருகின்றன.

1968 ஆம் ஆண்டு முதல் தான் இந்த வகையான வதந்திகள் அஜினோமோட்டோ உப்பின் மீது பரவி வந்தது. அமெரிக்கன் கெமிக்கல் சொசைட்டி American Chemical Society) இதை ஆய்வு செய்து, இந்த உப்பை சீரான அளவில் எடுத்து கொண்டால் பாதிப்பில்லை என கூறி விட்டது.

இந்த உப்பை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மட்டுமே பாதிப்பு உண்டாகும். அத்துடன் இதை அதிக அளவில் எடுத்து கொண்டால் சில பாதிப்புகள் சிலருக்கு ஏற்பட கூடும் என இந்த ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன. மற்றபடி இதை உணவில் சேர்த்து சாப்பிடும் போது எந்தவித பாதிப்பும் இருக்காது.

ஆனால், அஜினோமோட்டோ கலந்த உணவுப் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியைத் தூண்டும் ஹார்மோன் சுரப்பது வெகுவாகக் குறையும்.பெரியவர்களுக்குக் கூட கழுத்துப் பிடிப்பு, தலைவலி, நெஞ்சுவலி, தலைசுற்றல், மூச்சுத் திணறல் வர வாய்ப்பு உள்ளது.

நம் ஊட்டச்சத்து அதிகரிப்பதில்லையாதலால் எந்த பயனுமில்லை. ஆனால் அதே சமயம் சுவைக்கு அடிமையாக்கி ஆரோக்கியமற்ற வேக உணவுகளை (Fast food) அளவுக்கு அதிகமாக சாப்பிட வைப்பதால் அதன் மூலம் உடல் நலம் கெடலாம். எனவே அளவுக்கு மிஞ்சினால் அமுதும் நஞ்சே.

தலைவலி

அஜினோமோட்டோ தலைவலியை உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், இந்த நிலையை அடிக்கடி அனுபவிக்கச் செய்யும்.

நரம்பு பாதிப்பு

அஜினமோட்டோவை உணவில் சேர்த்துக் கொள்வதால் புர்கின்ஸன் நோய், அல்ஸீமர்ஸ், ஹன்டிங்டன் மற்றும் மல்ட்டிபில் ஸ்லெரோசிஸ் ஆகிய நியூரோடிஜெனரேட்டிவ் நோய்களை ஏற்படுத்தும்.

இதயம்

அஜினமோட்டோவை சாப்பிடுவதன் மூலம் இதயத்தில் படபடப்பு ஏற்படும்.

பெண்களுக்கு

அஜினமோட்டோவுடன் தொடர்புள்ள பிரச்சனைகளில் ஒன்றாக பெண்களின் மலட்டுத்தன்மை உள்ளது. அதுவும் கர்ப்பிணிகள் தவிர்க்க வேண்டிய உணவுகளில் ஒன்றாக அஜினமோட்டோவும் உள்ளது.

%d bloggers like this: