இன்றைய நவீன உலகில் ஃபிட்டாக இருப்பதும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற தேவையும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இது அத்தனைக்கும் வாழ்க்கை முறையில் நிகழ்ந்த சில மாற்றங்களே காரணம். ஏனெனில் நவீன மாற்றங்கள் அனைவரையும் ஆரோக்கியமற்ற உணவுகளை நோக்கியும், உடல் உழைப்பு இல்லா வேலைகளுக்கும்
பழக்கப்படுத்திவிட்டது. அதன் விளைவுதான் உடல் எடை அதிகரித்தல்.
உடல் எடை அதிகரிப்பால் தற்போது பல வகையான உடல் ஆரோக்கியக் கேடுகள் விளைவதால் மீண்டும் பலரும் நவீன வாழ்க்கையை தவிர்த்து பழமையை நோக்கி நகரத் தொடங்கிவிட்டனர்.
அந்த வகையில் ஆரோக்கியமான உடல் எடையைக் கொண்டிருக்க தினமும் ஓம விதைகளைப் பயன்படுத்தி டீ அருந்தி வந்தால் உடல் எடைக் குறையும் என ஆய்வு தெரிவிக்கிறது.
அதோடு அது செரிமானத்தை சீராக்கவும், மெட்டாபாலிசத்தை தூண்டவும் உதவுகிறது. அதோடு ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைவாக உள்ளதால் நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். எனவே அதில் எப்படி டீ போடுவது என்று பார்க்கலாம்.
அரை ஸ்பூன் ஓம விதை மற்றும் 1 ஸ்பூன் சீரகம் என இரண்டையும் ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து இரவு தூங்கும் முன் ஊற வைத்துவிடுங்கள்.
மறுநாள் காலை எழுந்து அதில் 1/2 துண்டு இஞ்சி சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். பின் அதில் அரை பாதி எலுமிச்சை , மற்றும் புதினா இலைகளை சேர்த்து கலந்து குடிக்கலாம். சுவைக்கு கொஞ்சம் தேன் கலந்துகொள்ளுங்கள்.
எனவே தினமும் பால் டீ குடிப்பதை விட இந்த டீக்கு மாற்றம் செய்து பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.