டிரைவிங் லைசன்ஸ் விதிமுறையில் மாற்றம்.. அக்.1 முதல் அமலுக்கு வர உள்ள புதிய விதிகள்.. என்னென்ன தெரியுமா..?

வரும் அக்டோபர் 1 முதல், நமது அன்றாட வாழ்க்கை தொடர்பான பல விதிகளில் மாற்றங்களை நீங்கள் காணப்போகிறீர்கள். இந்த புதிய விதிகள், நம் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் என்பதால், இந்த மாற்றங்களைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வது அவசியம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு சமீபத்தில் நாட்டில் வாகன பதிவு அட்டைகள் (ஆர்.சி) மற்றும் ஓட்டுநர் உரிமங்களை (டி.எல்) வழங்குவதில் மாற்றத்தை ஏற்படுத்தியது.

மேலும், அக்டோர்பர் 1 முதல் பெட்ரோல் பம்புகளில் கிரெடிட் கார்டு மூலம் எரிபொருள் நிரப்பினால் எந்த தள்ளுபடியும் வழங்கப்படாது. இதேபோல், பெரு வணிகங்களுக்கு, மத்திய நிதியமைச்சர் நிராமலா சீதாராமன் ஏற்கனவே அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு அக்டோபர் முதல் நடைமுறைக்கு வரும்.

  1. டிரைவிங் லைசன்ஸ் மற்றும் ஆர்.சி விதிகளில் பெரிய புதுப்பிப்பு

அக்டோபர் 1 முதல் இந்தியா முழுவதும் சீரான வாகன பதிவு அட்டைகள் (Uniform vehicle Registration cards -RC), மற்றும் ஓட்டுநர் உரிமங்கள் (driving license) வழங்கப்படும். புதிய ஓட்டுநர் உரிமத்தில் விரைவான மறுமொழி குறியீடு (QR code) மற்றும் அருகிலுள்ள பல தொடர்பு (Near Field Communication) போன்ற அம்சங்களுடன் மேம்பட்ட மைக்ரோசிப் இருக்கும்.

இந்த மாற்றங்கள், மையப்படுத்தப்பட்ட ஆன்லைன் தரவுத்தளத்தில் (centralised online database) லைசன்ஸ் வைத்திருப்பவரின் பதிவுகள் மற்றும் அபராதங்களை 10 ஆண்டுகள் வரை தக்க வைத்துக் கொள்ள உதவும். புதிய டிரைவிங் லைசனஸ் மூலம் மாற்றுத்திறனாளி ஓட்டுநர்களின் பதிவுகள், வாகனங்களில் செய்யப்பட்ட மாற்றங்கள் மற்றும் உறுப்புகளை தானம் செய்வதற்கான நபரின் அறிவிப்பு ஆகியவற்றைப் பராமரிக்கவும் அரசாங்கத்திற்கு உதவும்.

ஆர்.சி.க்களைப் பொறுத்தவரை, அக்டோபர் 1 முதல் இந்த செயல்முறையை காகிதமில்லா முறையை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. புதிய ஆர்.சி புத்தகத்தில், உரிமையாளரின் பெயரை முன்பக்கத்தில் அச்சிடப்படும், அதே நேரத்தில் மைக்ரோசிப் மற்றும் கியூஆர் குறியீடு அட்டையின் பின்புறத்தில் பதிக்கப்படும்.

  1. பெட்ரோல் பம்புகளில் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் மாற்றம்..

அக்டோபர் 1 முதல் பெட்ரோல் பம்புகளில் எரிபொருள் வாங்குவதற்காக செய்யப்படும் கிரெடிட் கார்டு செலுத்துதல்களுக்கு தள்ளுபடி வழங்கப்படாது. டிஜிட்டல் கட்டணங்களை ஊக்குவிக்க எண்ணெய் நிறுவனங்கள் கிரெடிட் / டெபிட் கார்டுகள் மற்றும் இ வாலட்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தள்ளுபடியை அறிமுகப்படுத்தின. இதில், oரு நல்ல செய்தி என்னவென்றால், டெபிட் கார்டுகள் மற்றும் பிற டிஜிட்டல் கொடுப்பனவுகளுக்கான தள்ளுபடிகள் இப்போது தொடரும். கிரெடிட் கார்டுகளுக்கும் மட்டும் தள்ளுபடி கிடைக்காது.

  1. வீடு, கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான விகிதங்கள் குறைய வாய்ப்பு..

வங்கிகள் தங்கள் சில்லறை மற்றும் எம்எஸ்எம்இ கடன்களை வெளி வட்டி விகித வரையறைகளுடன் இணைப்பதை இந்திய ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியது. இதன் திட்டம் தொடங்கப்படுவதால் வீடு, கார் மற்றும் தனிநபர் கடன்களுக்கான விகிதங்கள் குறையும்.

  1. எஸ்பிஐ புதிய விதி :

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஏ.எம்.பி எனப்படும் சராசரி மாத நிலுவைத் தொகையை( Average Monthly Balance) குறைக்க முடிவு செய்துள்ளது. மெட்ரோ மற்றும் நகர்ப்புற மையங்களில் கணக்கு வைத்திருக்கும் எவருக்கும், சராசரி மாத நிலுவைத் தொகை ரூ .3,000 ஆகவும், கிராமப்புற கிளைகளுக்கு ரூ .1000 ஆகவும் இருக்கும். இந்தத் தொகையை பராமரிக்கத் தவறிய கட்டணமும் குறைக்கப்படும்.

ஒரு வாடிக்கையாளர் மெட்ரோ மற்றும் நகர்ப்புற மையக் கிளைகளில் ரூ .3,000 பராமரிக்கத் தவறினால், 50 சதவிகிதம் குறைந்துவிட்டால், தனிநபருக்கு ரூ .10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். கணக்கு வைத்திருப்பவர் 50-75 சதவீதத்திற்கு மேல் குறைந்துவிட்டால், அவரிடம் இருந்து ரூ.12 அபராதம் மற்றும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். கணக்கு வைத்திருப்பவர் 75 சதவீதத்திற்கு மேல் குறைந்துவிட்டால், ரூ .15 அபராதம் மற்றும் ஜி.எஸ்.டி செலுத்த வேண்டும்.

  1. கார்ப்பரேட் வரி குறைப்பு :

மத்திய நிதியமைச்சர் நிராமலா சீதாராமன் அறிவித்த கார்ப்பரேட் வரி குறைப்பு அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

%d bloggers like this: