3 பொருள் இருந்தா போதும். “எந்த நோயும் வராது”. உங்க ஆயுள் அதிகரிக்கும்..!!

காலை வேளையில் இஞ்சியும் பகல் நேரத்தில் சுக்கு இரவில் கடுக்காய் உண்டுவந்தால் கோல் ஊன்றி நடப்பவர்களும் கம்பீரமாக நடப்பார்கள் என்பது சித்தரின் பாடல் ஆகும். சுக்கு, இஞ்சி, கடுக்காய் இது மூன்றும் உடலில் இருக்கும் கபம் வாதம் பித்தம் என மூன்றையும் சரிசெய்யும் ஒன்று. இதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிய தொகுப்பு

இஞ்சி

இஞ்சியின் தோல் நஞ்சு தன்மை கொண்டது என்பதால் தோலை எடுத்த பிறகு உபயோகப்படுத்த வேண்டும். காலை வேளை 3 டீஸ்பூன் இஞ்சிச்சாறு தேன் கலந்து வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பித்தத்தை சரி செய்ய முடியும்.

சுக்கு

சுக்கின் மேல் வெற்றிலைக்கு போடும் சுண்ணாம்பை தடவி நன்றாக காய வைக்கவும்.

கடுக்காய்

கடுக்காயை உடைத்து மேல் இருக்கும் சதைப் பகுதியை மட்டும் எடுத்து நன்றாக இடித்து பொடியாக்கி கொள்ளவும். அதனை இரவு தூங்குவதற்கு முன் சுடு தண்ணீரில் ஒரு டீஸ்பூன் அளவு கலந்து குடித்து வரவும். இது கபம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை சரிசெய்யும்.

தினமும் இந்த மூன்றையும் சாப்பிட்டு வந்தால் எந்த நோயும் நம்மை நெருங்க முடியாது.

%d bloggers like this: