₹ 2000 கோடி சொத்துக்கள் முடக்கம்… அதிர்ச்சியில் சசிகலா… பரபர பின்னணி…!

சுட்டெரிக்கும் கோடைக்காலத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வெடுக்கும் குளுகுளு இடம் கொடநாடு எஸ்டேட். ஜெயலலிதா, சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் பெயரில், 955 ஏக்கர் பரப்பளவில் குன்றுகளுக்கு மத்தியில் அமைந்துள்ளது கொடநாடு பங்களா. பினாமி பெயரில் சொத்து சேர்த்த வழக்கில், 200 ஆண்டு பழமையான கொடநாடு எஸ்டேட்டை தற்போது

வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மொத்த எஸ்டேட்டையும் முடக்கியுள்ளதாக வருமானவரித்துறையின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். சில நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டும் என்றால் முன்னாள் ஜெயலலிதா விரும்பிய இடம் சிறுதாவூர் பங்களா.. சென்னையை அடுத்த பழைய மகாபலிபுரம் சாலையில் 150 ஏக்கரில் அமைந்துள்ள இந்த பங்களாவும் வருமானவரித்துறை நடவடிக்கைக்கு தப்பவில்லை.
10க்கும் அதிகமான வருமானவரித்துறை அதிகாரிகள், சிறுதாவூர் பங்களா வாசலில் சொத்து முடக்கத்திற்கான நோட்டீஸை ஒட்டிச்சென்றனர். ஒரு காலத்தில அரசியல் அதிகாரமாக விளங்கிய பங்களாக்களை வருமானவரித்துறை முடக்கியதன் பின்னணி என்ன?

2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு சொந்தமான 187 இடங்களில் வருமானவரித்துறை மெகா ரெய்டு நடத்தியது. அந்த சோதனையிலும், அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனையிலும் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில் பினாமிகள் கண்டறியப்பட்டு, அவர்களின் சொத்துக்களை வருமானவரித்துறை தொடர்ந்து முடக்கி வருகிறது. முதல்கட்டமாக சென்னை, கோவை, புதுவையில் உள்ள 1600 கோடி மதிப்புள்ள 9 சொத்துக்கள் முடக்கப்பட்டன. மேலும் படிக்க…நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்; உ.பி.யில் அதிகம் – யு.ஜி.சி தகவல்

இரண்டாவது கட்டமாக, போயஸ் தோட்டம், தாம்பரம், சேலையூர், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய பகுதியில் அமைந்துள்ள 300 கோடி ரூபாய் சொத்துக்களை வருமானவரித்துறை முடக்கியது. தற்போது மூன்றாவது கட்டமாக, 2000 கோடி ரூபாய் சந்தை மதிப்புள்ள கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் பங்களா ஆகியவற்றை வருமானவரித்துறை அதிகாரிகள் முடக்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அடுத்த 90 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்கப்படவில்லை என்றால், முடக்கப்பட்ட சொத்துக்கள் சட்டப்படி, அரசுக்கு சொந்தமாகிவிடும்.
1991-1995 ஆகிய ஆண்டுகளுக்குள் வாங்கப்பட்ட இந்த சொத்துக்களுக்கு, ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு ஜெ.தீபா, ஜெ. தீபக் ஆகியோர் வாரிசு என்பதால், அவருகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தோழி ஜெயலலிதாவுடன் தான் சேர்ந்து வாழ்ந்த சொத்துகளை வருமானவரித்துறை முடக்கியுள்ள செய்தியைக் கேள்விப்பட்ட சசிகலா அதிர்ச்சியடைந்துள்ளதாக பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சசிகலா எப்போதுவேண்டுமானலும் விடுதலை ஆகலாம் என அவரது ஆதரவாளர்கள் கூறிவரும் நிலையில், இந்த சொத்து முடக்கும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: