வீட்டில் ஈ.பி பில் எகிறுதா? கரண்டை மொடாக்கணக்கில் குடிக்கும் மின் சாதனங்கள் எது எது தெரியுமா? இனி ஒரு கை பார்க்கலாம் வாங்க!

கரண்ட் பில் மாதம் 500 ரூபாய் கட்டிக்கொண்டிருந்த எங்க வீட்டிற்கு, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்னர் 3500 ரூபாய் பில் வந்தது. அரசாங்கத்தை குறை சொல்ல முடியாது. ஏன் அவ்வளவு தொகை வந்தது என்று விசாரித்து பார்த்ததில், நாங்க தான் அதிக யூனிட் யூஸ் பண்ணி இருக்கோம்.

நூறு யூனிட் ஓடிக்கொண்டிருந்த இடத்தில், 420 யூனிட் ஓடியிருக்கு. பின்ன பில் அவ்வளவு வராமல் என்ன செய்யும்? நான்கு மாதம் வீட்டில் இருந்த நேரத்தில், 24 மணி நேரமும் மின்விசிறி ஓடியிருக்கு. அதில் வரும் காற்று போதாதென, பக்கத்தில் ஏர் கூலர் வேறு.

சரி ஒரு முறை பட்டாச்சு. இனியும் திருந்தலைனா நல்லா இருக்காது. உடனே எலக்ட்ரீசியனை கூப்பிட்டு, குண்டு பல்பு போட்டிருந்த பழைய ஹோல்டரை எல்லாம் தூக்கிவிட்டு எல்.இ.டி பல்ப் போடச்சென்னேன்.

ஜீரோ வாட்ஸ் பல்புன்னு சொல்லிக்கலாம். ஆனால் அதுவும் 15 வாட்ஸ் கரண்ட் உறிஞ்சி எடுக்குமாம். செல்போனை சீக்கிரம் சார்ஜ் போட வேண்டும் என்றால், ஏரோபிளான் மோடுக்கு மாற்றிவிட்டு பிளக்கில் சொறுகினால் விரைவாக சார்ஜ் ஏறி விடுமாம். வீட்டில் எந்த இடத்தில் எல்லாம் சுழலும் பாகம் அதிகம் இருக்கிறதோ, அது தான் இருப்பதிலேயே அதிக கரண்ட் உறிஞ்சி குடிக்குமாம். மோட்டார், ஃபேன், மிக்ஸி, கிரைண்டர், ஏசியை அளவோடு பயன்படுத்தினால் தான் கரண்ட் பில் பிரச்சனையில் இருந்து தப்பிக்க முடியும்.

இரவு நேரம் ஃபிரிட்ஜை அணைத்து வைத்துவிட்டு, பகலில் மட்டும் இயங்கவிட்டால் கரண்ட் பில் குறையும் என்பது தவறான நம்பிக்கை. முழு கூலிங் ஆன பிறகு, ஃபிரிட்ஜே இயக்கத்தை நிறுத்தும், அது மாதிரியான நேரங்களில் தான் மின்சாரம் சேமிக்கப்படும். சுவரில் பொருத்தக்கூடிய டீவி எந்த அளவுக்கு சைஸ் பெரிதாகிக்கொண்டே செல்கிறதோ, அந்த அளவுக்கு கரண்ட் உறிஞ்சும் வேகமும் அதிகரிக்கும். குறிப்பாக 40 இஞ்சுக்கு மேல் போகப்போக அதிக மின்சாரம் செலவழிக்க வேண்டி வரும்.

பொதுவாக ‌‌‌சுவரில் பதிக்கும் பல்புகளில் ஆற்றல் அதிகம் சுவரில் பட்டு வீணாகிறது. அதனால் தான் பல ஹோட்டல்களிலும், பங்களா அமைப்பிலான வீடுகளிலும் ஒளியை முன்னோக்கி பிரதிபலிக்கும் ரிப்லக்டர் (reflectors) பொருத்தியிருப்பார்கள். இப்போது புதிதாக கட்டப்படும் வீடுகளில், சீலிங் விளக்குகள் அதிகம் இடம்பெறக்காரணமும் இது தான். இது போல குறைந்த மின்சாரத்தில், முடிந்த அளவுக்கு ஆற்றலை பயன்படுத்தும் முறை நிறையவே இருக்கும். எலக்ட்ரீசியன் அண்ணாவின் புண்ணியத்தில் எனக்கு இதெல்லாம் தெரிந்தது.

%d bloggers like this: