அடுத்தடுத்து எடுபடாத ‘திட்டங்கள்’ – ஐபேக் மீது கோபத்தில் ஸ்டாலின் குடும்பம்?!

ஆன்லைனில் பெறப்படும் உறுப்பினர் அட்டையைவைத்து, தி.மு.க உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார்கள். உறுப்பினர் அட்டையில் உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதி கட்சி நிர்வாகியின் கையெழுத்து வேண்டுமாம்

என்ட்ரி கொடுத்தவுடன் செய்திகளுக்குள் தாவிய கழுகார், “ஐபேக் தரப்பைக் கண்காணிக்கச் சொல்லியிருக்கிறதாம் தி.மு.க தலைமை. ஏற்கெனவே, ஆன்லைனில் நடக்கும் உறுப்பினர் சேர்க்கையில் ஏகப்பட்ட குளறுபடிகளாம். போதாக்குறைக்கு, ‘தொகுதிக்கு மூன்று பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் தயார் செய்கிறோம். இதில் இடம்பெற வேண்டுமானால், எங்களை கவனியுங்கள்’ என்று ஒருசில ஏரியாக்களில் ஐபேக் பெயரைச் சொல்லி வசூல்வேட்டை நடப்பதாகப் புகார்கள் செனடாப் சாலையை எட்டியிருக்கின்றன.

இதனால், ஐபேக்கை மட்டுமே நம்பிக் கொண்டிருக்காமல், கட்சியினரிடமிருந்தும் நேரடியாக தரவுகளைத் திரட்ட தயாராகியிருக்கிறார் ஸ்டாலின். முதற்கட்டமாக, ஐபேக் தரப்பில் நடக்கும் குளறுபடிகளைப் பட்டியலிட்டு, தலைமைக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறாராம். இந்தப் புகார் பட்டியலில் பல பூதங்கள் வெளிவரலாம் என்கிறார்கள்.”

“ஆன்லைன் உறுப்பினர் சேர்க்கையில் என்ன பிரச்னை?”

“ஆன்லைனில் பெறப்படும் உறுப்பினர் அட்டையைவைத்து, தி.மு.க உட்கட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிறார்கள். உறுப்பினர் அட்டையில் உறுப்பினர் மற்றும் அந்தப் பகுதி கட்சி நிர்வாகியின் கையெழுத்து வேண்டுமாம். ஆன்லைனில் உறுப்பினர் அட்டைக்கு விண்ணப்பித்துவிட்டு, உட்கட்சித் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகக் கட்சி சீனியர்களிடம் பேசியபோதுதான், இந்தச் சிக்கல் தெரியவந்திருக்கிறது.

இந்தத் தகவல் ஒவ்வொரு மாவட்டமாகப் பரவி, இப்போது ஆன்லைன் மூலமாகக் கட்சி உறுப்பினராகச் சேரவே தயக்கம் காட்டுகிறார்களாம். ஏற்கெனவே, ‘ஒன்றிணைவோம் வா’ திட்டம் துவண்டுவிட்டது. இப்போது, ‘எல்லோரும் நம்முடன்’ திட்டமும் சுருண்டுவிட்டதால், ஐபேக் மீது ஸ்டாலின் குடும்பம் கோபத்தில் இருக்கிறதாம்!”

%d bloggers like this: