சமைத்ததும் குக்கரின் விசிலை உயர்த்தி ஆவியை வெளியேற்றுவது சரியா?

இதெல்லாம் ஒரு கேள்வியா என சொற்பமாக நினைக்க வேண்டாம். இதில் தெரிந்துகொள்ள ஏகப்பட்ட விஷயம் இருக்கு. அன்றாடம் நாம் செய்யும் வேலைதான் இதில் என்ன இருக்கிறது தெரிந்துகொள்ள? என சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

அவசர வேலை காலத்தில் உடனடியாக சாப்பிட வேண்டும் இன்னும் விசில் அடங்கவில்லை என்றால் உடனே என்ன செய்வோம் விசிலை தூக்கிவிட்டு ஆவியை வெளியேற்றுவோம். சில நேரங்களில் முழுதாக ஆவி வெளியேறாமல் குக்கர் மூடியை திறந்து சாப்பாடு வெளியே பறப்பதெல்லாம் சாதாரண விஷயம்.

இந்த நேரத்தில் விசிலை அடக்க வேறு ஒரு வழி உண்டு. வாட்டர் டேப்பை திறந்துவிட்டு, குக்கர் முழுவதுமாக நனையும் படி வையுங்கள். ஒருநிமிடம் உஸ் சத்தம் வந்து கொண்டே இருக்கும்.

பிறகு திறந்து பரிமாறலாம்.

முடிந்தவரை ஆவி அடங்கும் வரை காத்திருக்க வேண்டும். இல்லையெனில் பெண் முகமாக இருந்தால் மேக்கப்போடு போச்சு, ஆண் முகமாக இருந்தால் மேக்கப் போட்ட மாதிரி ஆகிவிடும். ஆக்க பொறுத்தாச்சு! ஆற பொறுக்க மாட்டோமா?

சரி குக்கரில் அரிசி போடும்போது எவ்வளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் என்பது தெரியவில்லையா? ரொம்ப சிம்பிள் குக்கரில் அரிசி போட்டு அதில் அரை இன்ஜ் அளவிற்கு நீர் ஊற்றினால் போதுமானது. அதாவது ஆள்காட்டி விரலின் முதல் கோடு நீரில் நனையும் வரை ஊற்றிக்கொள்ளுங்கள்.

ஒருசில நேரங்களில் தண்ணீர் குறைவாக வைத்து, சாதம் வேகாமல் போயிருக்கலாம். இப்போது என்ன செய்ய வேண்டும் என்றால், அரைகுறையாக வெந்த அரிசியில் முன்னர் ஊற்றிய நீரின் அளவுக்கு பாதியளவு ஊற்றினால் போதுமானது. சாதம் அருமையாக வெந்துவிடும்.

விசிலே வரலையே சாதம் வெந்ததை எப்படி கண்டு பிடிப்பது என்றால், குக்கரை அடுப்பில் இருந்து இறக்கியதும் அதனை ஆட்டிப்பாருங்க நீர் ஆடுவது போல, இலகுவாக இருந்தால் சாதம் வேகவில்லை என அர்த்தம். இந்த விஷயங்களில் பெண்களுக்கு கண்டிப்பாக அறிவுரை இருக்கும். பேச்சிலர் குக்கிங் என்றால் மேற்கண்டு சொன்னது எல்லாம் அனுபவ பூர்வமாக உணர்ந்திருப்பார்கள். இப்போது தான் சமைக்க ஆரம்பித்துள்ளேன் இந்த ரிஸ்க் எல்லாம் வேண்டாம் என்பவர்களுக்கு தான் இந்த பதிவு.

%d bloggers like this: