நான் ஸ்டிக் பாத்திரங்களை பயன்படுத்துவது ஆபத்தானதா? நம்ம ஊரு தோசைக்கல்லுக்கு என்ன குறைச்சல்?

எனக்கு தெரிந்து, 15 வயது வரைக்கும், சந்தையில் வாங்கிய இரும்பு தோசைக்கல்லில் தான் தோசை ஊற்றிக்கொண்டிருந்தோம். இடையில் எண்ணெய் ஊற்றத்தேவையில்லை என்று சொல்லி ஒரு வகையான தோசைக்கல் அறிமுகமானது. அப்போதைக்கு அதன் பெயரெல்லாம் தெரியாது. அதுதான் நான் ஸ்டிக்

தோசைக்கல்லாம். பார்க்க கருமையாக கண்ணைக்கவரும் வகையில் இருந்ததாலும், வழக்கமான தோசைக்கல்லைப் போல அடிபிடிக்காமல் இருந்ததாலும், அறிமுகமான குறுகிய காலத்திலேயே பலரது வீடுகளிலும் அலங்கரித்தது.

தோசை ஒட்டாமல் வருவதற்கும், எண்ணெய் பிசு பிசுப்பை பாத்திரத்தில் தங்காமல் வெளியேற்றவும், டெஃப்லான் என்ற இரசாயன பூச்சு நான்-ஸ்டிக் பாத்திரங்களுக்கு மேல் கொடுக்கப்பட்டிருக்கும்.

300 டிகிரி சொல்சியஸ் வரைக்கும் சூடுபடுத்தினால் எந்த பாதிப்பும் இல்லை. அதற்கு மேல் சூடானால் தான் நச்சு வாயுவை வெளியேற்றும். பழைய இரும்பு கல் போல, தோசை ஊற்றிவிட்டு, அது வேகும் வரையில் வெளியில் பேச சென்றுவிடக்கூடாது. அடுத்து பாத்திரத்தில் கீறல் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தான் நான்-ஸ்டிக் பாத்திரம் வாங்கும் போதே சில கடைகளில், மரக்கரண்டி இலவசமாக கொடுப்பார்கள். பாத்திரத்திற்கு மேலே உள்ள கருப்பு பூச்சு தேய்ந்துவிட்டால், மாற்றிவிடுவது நல்லது.

சில நேரங்களில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அனல் அடிக்கும் அளவுக்கு சூடான பிறகு மாவை ஊற்றுவோம். நான்-ஸ்டிக் கல் பயன்படுத்தும் போது முடிந்த வரையில் அதிகம் சூடேற்றுவதை தவிர்க்கலாம். நம்முடைய முன்னோர்களுக்கு தெரியாத இரும்பு உருக்கு முறைகள் இல்லையென்றாலும், அவர்கள் மண் பாத்திரங்களிலேயே பெரும்பாலும் சமைக்க காரணம் இது தான்.

%d bloggers like this: