பெண்களே அச்சம் வேண்டாம்.. அந்தரங்கம் பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ..!!

நமக்கு உடல் உபாதை ஏற்பட்டால் மருத்துவரிடம் செல்வோம். அவரிடம் கேட்டு எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொள்வோம்.

ஆனால் மக்கள் என்னவோ செக்ஸ் மற்றும் இனப்பெருக்க உறுப்பு சார்ந்த சந்தேகங்களை மட்டும் கேட்க தயங்குகின்றனர் என்கிறார்களகள்.

பாலியல் மற்றும் இனப்பெருக்க பிரச்சினைகளுக்கு மக்கள் மனதில் ஏராளமான கேள்விகள் இருக்கின்றன.

ஆனால் அதை கேட்பதற்கான

சூழலை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வதில்லை என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள்.

சிலர் தங்கள் சந்தேகங்களை ஆன்லைன் மூலமாக தீர்த்துக் கொள்ள முயலுகின்றனர். பாலியல் மற்றும் இனப்பெருக்க பிரச்சனைகள் குறித்து மக்கள் நிறைய விஷயங்களை ஆன்லைனில் புரட்டுகின்றனர்.

பாலியல் மற்றும் உடற்கூறு விஷயங்களை பற்றி நேரடியாக பேசுவதை சங்கோஜமாக மக்கள் நினைக்கின்றனர்.

ஆனால் இதுவும் உங்க வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

எனவே தான் பாலியல், உடற்கூறியல் மற்றும் இனப்பெருக்கம் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கு மகப்பேறு மருத்துவர் நம்மிடம் பதில் அளிக்கிறார்.

என்

ணுறுப்பு சாதாரணமாக இருக்கிறதா?

நிறைய பெண்களுக்கு தங்களின் பெண்ணுறுப்பு பற்றிய கேள்விகள் எழுந்துள்ளன. குறிப்பாக அவர்களின் தோற்றத்தை மற்றவரிடம் ஒப்பிட்டு நிறைய கேள்விகளை அவர்கள் எழுப்புகிறார்கள்.

ஆனால் ஒன்று புரிந்து கொள்ள வேண்டும். உடல் பாகங்களின் தோற்றம் வேறுபடுவது ஒரு பொதுவான விஷயம். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு மாதிரி நிறத்திலயோ தோற்றத்திலோ பெண்ணுறுப்பை பெற்று இருக்கலாம்.

அதை நீங்கள் ஒப்பிட்டு பார்த்து எந்த

வுக்கும் வரக் கூடாது. எல்லாம் இயல்பான ஒன்று தான். பெண்ணுறுப்பில் காணப்படும் உதடுகள் போன்ற பகுதியை பற்றி அவர்கள் கவலைப்படுகின்றனர்.

இந்த உதடுகள் போன்ற பகுதி எப்படி ஆண்குறி ஒவ்வொரு ஆண்களுக்கும் வேறுபடுகிறதோ அதைப் போல இதுவும் வேறுபடும்.

எனவே இதைப் பற்றி கவலை கொள்ளத் தேவையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

அப்புறம் பெண்ணுறுப்பில் முடிகள் குறித்த கேள்விகள் அடிக்கடி வருகின்றனர். 20 – 30 வரையிலான பெண்கள் தங்கள் அந்தரங்க முடிகளை ஷேவிங் செய்யவோ நீக்கவோ முற்படுகின்றனர்.

இப்படி முடியை அகற்றும் போது அந்தரங்க பகுதியில் ஏற்படும் சிராய்ப்புகள், வெட்டுக்கள் மற்றும் காயங்கள் இவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

இவற்றால் உடலுறவால் பரவக் கூடிய

கள் பரவுகின்றன. எனவே அந்தரங்க முடிகளை நீக்காமல் இருப்பது உங்களுக்கு என்றைக்கும் பாதுகாப்பானது தான்.

ஒரு மார்பகத்தை விட மற்றொன்று பெரிதாக இருப்பது சாதாரணமா?

பெண்களுக்கு இரண்டு மார்பகங்களும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இளம் பருவத்தில் சமச்சீரற்ற தன்மை காணப்படும்.

இது பொதுவானது தான். சமச்சீரற்ற மார்பகங்களுக்கும் புற்றுநோய் கட்டிகளுக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் சுய

பரிசோதனை செய்வதை நினைத்து சில பெண்கள் பயப்படுகின்றனர்.

ஆனால் பெண்கள் அதை

டிப்பாக செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்திகிறேன். ஏனெனில் உங்க மார்பகங்களை பற்றி நீங்கள் அறிந்து கொள்வது முக்கியம்.

அப்பொழுது தான் மார்பக பகுதியில் ஏதேனும் புதியதாக மாற்றங்களை கண்டால் உங்கள் மருத்துவரிடம் பரிசோதனைக்கு செல்ல முடியும்.

ஆரம்பத்திலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவது உங்களுக்கு நல்லது.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் எவ்வளவு நாள் வலி நீடிக்கலாம் ?

மாதவிடாய் காலங்களில் கிட்டத்தட்ட 90 சதவீதம் பெண்கள் வலியை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு தசைப்பிடிப்பு, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை ஏற்படுத்தலாம். இப்யூபுரூஃபன் போன்ற மருந்துகளுடன் அழற்சி எதிர்ப்பு மருந்துகளான (NSAID கள்) வலியுறுத்துகின்றனர்.

சில பெண்களுக்கு மாதவிடாய் வலி மிகவும் கடுமையாக இருக்கிறது. இது ஒரு பெண்ணின் சாதாரண வாழ்க்கைக்கும், பள்ளி செல்வதற்கும் பணிக்கு செல்வதற்கும் ஆன திறனை பாதிக்கிறது.

உங்களுக்கு மருந்து மாத்திரைகள் எதுவும் பயன்படாத சமயங்களில் மகளிர் நல மருத்துவரை அணுகுவது நல்லது.

பெண்கள் தங்கள் மாதவிடாய் பிரச்சினைகளை அசால்ட்டாக விடுவதால் எண்டோமெட்ரியோசிஸ் மற்றும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (

) போன்ற பல நோய் மற்றும் இனப்பெருக்கக் கோளாறுகள் கண்டறியப்படாமலே போகிறது.

சமீபத்திய ஆய்வின் படி நாள்பட்ட வலியை அனுபவிக்கும் கிட்டத்தட்ட 2,500 பெண்களில் , 66 சதவீதம் பேர் தங்கள் பாலினம் காரணமாக மருத்துவர்கள் தங்கள் வலியை சரியாக கவனிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளனர்.

பெண்கள் தாங்கள் கூறும் பிரச்சனைகளை கருத்தில் கொள்ளும் மருத்துவரிடம் முதலில் செல்ல முயலுங்கள் .

மாதவிடாய் பிரச்சனைகள் உங்க அன்றாட வாழ்க்கையை பாதிக்கிறது என்றால் மருத்துவரிடம் தயங்காமல் ஆலோசனை பெறுங்கள்.

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது என் மாத விடாயை பாதிக்குமா?

ஒரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியின் போது கருப்பையின் புறணியானது தடினமாகி கரு

யானது கருவாக மாற ரெடியாக இருக்கும்.

இதுவே விந்தணுக்கள் வரவு இல்லையென்றால் அது மாதவிடாய் இரத்தப் போக்காக வெளியேற ஆரம்பிக்கும்.

ஆனால் நிறைய பேருக்கு ஹார்மோன் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் போதும் கருப்பையின் புறணியானது தடினமாகி விடுகிறது என்ற மனப்போக்கு உள்ளது.

ஆனால் உண்மையில் ஹார்மோன் பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகள் எந்த விதத்திலும் உங்க மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதில்லை.

மாறாக கருப்பையின் புறணியை மெல்லியதாக்கி உங்க மாதவிடாய் இரத்த போக்கு இலகுவாகவும், குறுகியதாக மாற்றக் கூடிய ஒன்றாகவும் பெண்களுக்கு உதவுகிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அதே மாதிரி ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சி பற்றி நிறைய தவறான கருத்துகளும் வலம் வருகின்றன.

ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி எப்படி இருக்கும், மற்றும் நீளம் மற்றும் இரத்தப்போக்கின் அளவு ஆகியவற்றின் மாறுபாடு குறித்து நிறைய தகவல்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

வயதுவந்த மாதவிடாய் சராசரி சுழற்சி 28 முதல் 35 நாட்கள் வரை நீடிக்கும் என்று மகப்பேறு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண்களில் பாதிக்கும் குறைவானவர்கள் 28 நாள் சுழற்சியைக் கொண்டுள்ளனர். அதிலும் சில பெண்கள் இதை கணக்கில் எடுத்துக் கொள்வதே இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிறப்புக் கட்டுப்பாடு பெண்களின் கருவுறுதல் தன்மையை பாதிக்குமா?

பிறப்புக் கட்டுப்பாடு மாத்திரைகளை எடுத்துக் கொள்வது பெண்களின் கருவுறுதல் திறனை பாதிக்குமா என்ற சந்தேகம் ஏராளமான பெண்களின் மனதில் உள்ளது.

நிறைய பெண்களுக்கு இதை பயன்படுத்திய பிறகு கர்ப்பம் தரிக்க முடியாமல் போய் விடுமோ என்ற எண்ணம் எழுகிறது என்று கூறியுள்ளனர்.

உண்மையில் பல வருடங்களுக்கு முன்பு பயன்படுத்திய கருப்பையக சாதனங்கள் (IUD கள்) சில நேரங்களில் இடுப்பு அழற்சி நோயுடன் ஏற்படுத்தி கருவுறாமைக்கு காரணமாகிறது. ஆனால் தற்போதுள்ள கருத்தடை மருந்துகள் அப்படி இருப்பதில்லை.

நீங்கள் தற்போது மாத்திரை, கருத்தடை சாதனங்கள் என்று எதை பயன்படுத்தினாலும் தற்காலிகமாக கருவுறுதலை தடுப்பதோடு மீண்டும் கருவுறுதலை நிலைநிறுத்த உதவுகின்றன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும் உங்க உடல் இதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். எந்தவொரு ஹார்மோன் சிகிச்சையையும் எடுப்பதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது நல்லது.

மனித பாப்பிலோமா வைரஸ் பற்றி என்ன தெரிந்து கொள்ள வேண்டும் ?

பாலியல் நோய்களை பரப்பக் கூடிய வைரஸ் தான் இந்த பாப்பிலோமா வைரஸ் என்பது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பாலியல் உறவு மூலமாக மற்றவர்க்கு பரவுகிறது. இந்த வைரஸால் கிட்டத்தட்ட 79 மில்லியன் அமெரிக்கர்கள் பாதிப்படைகின்றனர்.

சில பாப்பிலோமா வைரஸ்கள் எந்த

களையும் ஏற்படுத்தாது. சிலருக்கு இது பிறப்புறுப்பு மருக்கள் மற்றும் புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. கர்ப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்துகிறது.

வாய் வழி செக்ஸ் மற்றும் குத செக்ஸ் மூலம் அரிதாகவே இந்த நோய் பரவுகிறது. உடலுறுவின் போது ஆணுறைகள் பயன்படுத்துவது பாலியல் சம்பந்தமான நோய்கள் பரவாமல் தடுக்க உதவும்.

இந்த மனித பாப்பிலோமா வைரஸ்க்கு எதிராக எந்த சிகிச்சையும் இல்லை. உடலுறுவின் போது சில பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் நீங்கள் உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

கார்டெசில் 9 என்ற தடுப்பூசி சக்தி வாய்ந்த 9 மனித பாப்பிலோமா நோய்களை தடுக்க தற்போது உதவுகிறது. எனவே ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசிகளை போட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

இது இருபாலினத்தரை தாக்கினால் கூட இந்த வைரஸின் பாதிப்பை பெண்களை பரிசோதித்து மட்டுமே கண்டறிய முடிகிறது.

ஆண்களை பரிசோதித்து கண்டறிய முடிவதில்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.

பெண்கள் எவ்வாறு சோதனை செய்து கொள்ள முடியும் ?

பெண்களின் கர்ப்பப்பை வாயிலிருந்து உயிரணுக்களின் மாதிரிகளை சேகரிப்பதன் மூலம் இந்த சோதனையை மேற்கொள்ளலாம். 30 வயதிற்கு மேற்பட்ட பெண்களிடையே இந்த சோதனையை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

இதற்கு பேப் ஸ்மியர் என்ற டெஸ்ட் செய்யப்படுகிறது.

அதே நேரத்தில் இந்த மனித பாப்பிலோமா வைரஸ் செயலில் இருந்தால் மட்டுமே இந்த டெஸ்ட்டை செய்ய முடியும்.

இந்த வைரஸ் அழிக்கப்பட்டு விட்டாலோ செயலற்று போய் இருந்தாலோ இதை கண்டறிய இயலாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும் பேப் ஸ்மியர் பரிசோதனை தேவையா?

இந்த பேப் ஸ்பியர் பரிசோதனைக்காக பெண்களின் கர்ப்பப்பை வாய்ப் பகுதியில் இருந்து உயிரணுக்களின் மாதிரிகளை சேகரித்து பயன்படுத்துகின்றனர்.

21 வயதில் இருந்து ஒவ்வொரு பெண்களும் இந்த பரிசோதனையை செய்ய முற்படலாம்.

3 வருடங்களுக்கு ஒரு முறை என பரிசோதனை செய்து வரலாம்.

அதே மாதிரி 30 வயதில் பரிசோதனை மேற்கொண்டு அடுத்த வரும் காலகட்டத்திலும் பரிசோதனை முடிவுகள் இயல்பானவை என்று இருந்தால் அப்போது அடிக்கடி பரிசோதனை செய்து கொள்வதை நீங்கள் குறைத்துக் கொள்ளலாம்.

பொதுவாக 5 வருடங்களுக்கு ஒரு முறை என 65 வயது வரை இந்த லேப் ஸ்மியர் பரிசோதனையை நீங்கள் செய்து வரலாம்.

இதுவே பாலியல் தொடர்பான நோய்களை தடுக்க சிறந்த வழி என்று மகப்பேறு மருத்துவர்கள் பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: