நடை பயிற்சியின் போது செய்யக்கூடாத சில தவறுகள்

உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல சத்துமிக்க உணவு முறை எவ்வளவு முக்கியமோ, அதேபோல உடற்பயிற்சிகளும் அவசியம். உடனே நாளை காலை எழுந்ததும் ஏதேனும் உடற்பயிற்சியைச் செய்யத் தொடங்கி விட வேண்டாம். சரியான பயிற்சியாளர் வழிகாட்டாமல் செய்யப்படும் உடற்பயிற்சிகளால் இன்னும் சிக்கலே வரக்கூடும்.

ஆனால், நீங்கள் வாக்கிங் செல்வதற்கு யாரையும் கேட்க வேண்டியதில்லை. நீங்களாகவே பயிற்சியைத் தொடங்கலாம். தொடங்கும் நாளிலேயே அதிக தூரம் செல்ல வேண்டும் என்று முடிவெடுக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக வாக்கிங் செல்லும் தூரத்தை அதிகரிக்கலாம்.

வாக்கிங் செல்வதால் உடல் சுறுசுறுப்பு தொடங்கி ஏராளமான பலன்கள் இருக்கின்றன. கால்களை நீட்டி வைத்து, வேகமாக நடப்பதே கலோரிகளை எரிக்க உதவுகிறது என்கிறார்கள்.

ஒன்று: வாக்கிங் குரூப் தொடங்கிக் கொள்வது நல்லதுதான். நண்பர்களோடு செல்லத் தொடங்கினால் நாம் ஒருநாள் சோம்பல் பட்டாலும் அவர்கள் இழுத்துச் சென்றுவிடுவார்கள். ஆனால், மிக சத்தமாகப் பேசிக்கொண்டு சண்டை வரும் வரையான காரசாரமான விவாதங்களை வாக்கிங் செல்லும்போது செய்யக்கூடாது.

இரண்டு: சிலருக்கு பாடலை மெதுவான ஒலியில் கேட்டுக்கொண்டே வாக்கிங் செல்ல பிடிக்கும். நல்ல பழக்கம்தான். அதற்காக வெளியே சத்தமாக இருக்கிறது என்று உங்களின் பாடல் ஒலியை அதிகரித்துகொள்ள கூடாது. அப்படிச் செய்யும்பட்சத்தில் மனம் சீக்கிரமே சோர்வாகி விடும். ஹெட் போன் அலர்ஜி தரும் அத்தனையும் நடக்கக்கூடும்.

மூன்று: வெளியில் சென்று சூரிய ஒளியில் வாக்கிங் செல்வதே நல்லது. சிலருக்கு அப்படிச் செல்ல வாய்ப்பும் இடமும் கிடைக்காது. ஆனால், பலருக்கு வெளியில் இயற்கையை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல வாய்ப்பு இருக்கும். ஆனால், அதைத் தவிர்த்து வீட்டுக்குள் அல்லது ட்ரம்மில் செல்ல விரும்புவார்கள். அப்படியான சொகுசான வாக்கிங் செல்ல ஆசைப்படக்கூடாது.

நான்கு: வாக்கிங் செல்வதற்கு என தனியாக சூ வாங்கிகொள்ளுங்கள். அதை வீண் செலவு என நினைக்காதீர்கள். கால்களுக்கு ரொம்ப இறுக்கமான சூ வைத் தவிருங்கள். கால்களுக்கு மென்மையான சூ களையே தேர்ந்தெடுக்க மறக்காதீர்கள்.

ஐந்து: நீண்ட தூரம் வாக்கிங் செல்லும்போது கடைகள் பலவற்றைப் பார்ப்பீர்கள். உடனே சூடான வடை, பஜ்ஜி, டீ, காபி என்று குடிக்கவும் சாப்பிடம் இறங்கி விடாதீர்கள். அப்படிச் செய்தால் அன்றைக்கு நடந்த நடை வேஸ்ட்தான்.

ஆறு: எண்ணெய் பலகாரம், டீ, காபி குடிக்க மாட்டேன். ஆனால், அங்கே கீரை விற்கும், காய்கறி விற்கும் அப்படியே வாங்கிக்கொண்டு வருவேன் என்று சிலர் சொல்வார்கள். செல்லும் வழியில் ஏதேனும் கிடைத்தால் வாங்கி வருவது தவறு அல்ல. ஆனால், தினமும் அதைச் செய்துகொண்டிருக்காதீர்கள். நீங்கள் செல்வது வாக்கிங்தான் ஒழிய ஷாப்பிங் அல்ல.

ஏழு: சிலர் வாக்கிங் செல்லும்போது புகை பிடிக்கும் பழக்கம் வைத்துள்ளார்கள். அறவே கூடாது. புகையே கூடாது. வாக்கிங் செல்லும்போது உடல் உறுப்புகள் நன்கு இயங்கும். குறிப்பாக நுரையீரல் நன்கு சுத்தமான காற்றைச் சுவாசித்திருக்கும். அந்த நேரத்தில் புகையை அனுப்பி பாழ் படுத்தி விட வேண்டாம்.

எட்டு: நோ சோஷியல் மீடியா. ஆம். பலரும் வாட்ஸப்பில் உரையாடிக்கொண்டே, ஃபேஸ்புக் பார்த்துகொண்டே வாக்கிங் செல்கிறார்கள். இது தவறான பழக்கம். மொபைலைக் குனிந்து கொண்டே பார்த்துச்சென்றால் எதிரே இருக்கும் பள்ளம், குழி எதுவும் தெரியாது. சமுக வலைத்தளங்களில் படிக்கும் விஷயங்களுக்கு ஏற்ப உங்கள் மனநிலையையும் சிந்தனையும் மாறிவிடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: