அற்புத மருத்துவகுணம் நிறைந்த அதிமதுரம்.. என்னென்ன நோய்களை குணப்படுத்தும் தெரியுமா?

அதிமதுரம் ஏராளமான மருத்துவம் சார்ந்த நன்மைகளைத் தரக்கூடியது. இந்த மிகச் சிறந்த மூலிகையானது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் பயன்கள் தரக்கூடியது.

இது ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் பல நோய்களை குணப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் அதிமதுரத்தில் அடங்கியுள்ள மருத்துவகுணங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

  • அதிமதுரத்துடன், திப்பிலி போன்ற சில மூலிகைகளை பொடியாகச் சேர்த்து, நீரில் ஊறவைக்க வேண்டும். இந்த நீரை குழந்தைகள், பெண்கள் குடித்துவருவதால் நாள்பட்ட இருமல் கூட விரைவில் சரியாகும்.
  • மஞ்சள் காமாலை, நெஞ்சுச்சளி, தலைவலி போன்றவற்றிற்கு சிறந்த மருத்துவமாக அதிமதுரம் இருக்கிறது. மேலும் தலைவலி மற்றும் நெஞ்சு சளியை வரவே வராமலும் தடுக்க இயலும்.
  • பொடியை உணவில் சேர்த்து வருவதால், தொண்டை கரகரப்பு மற்றும் குரல் வளம்பெரும்.
  • மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமதுரம் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
  • அதிமதுர தூள் கலந்த நீரை தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆண்கள் எடுத்துக்கொள்வது நல்லது. இந்த அதிமருதத்தை ஊறவைத்தும் எடுத்துக்கொள்ளலாம்.
  • ஆண்களுக்கு இருக்கும் ஆஸ்துமா, இளநரை மற்றும் ஆண்மை குறைவு சம்பந்தமான சிக்கல்களையும் எளிதில் சரிசெய்யலாம்.
  • அதிமதுர தூளை ஊறவைத்து, பருகி வருவதால் மூட்டு வலி இருக்காது. உடலில் இருக்கும் வாதத்தன்மையானது குறைந்து இயல்பு நிலையில் இருக்கும். மேலும் சிறுநீரகங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்க அதிமதுரம் துணைநிற்கும்.
  • சிலருக்கு சிறுநீரகத்தில் நோய் தொற்று ஏற்பட்டு, சிறுநீர் பையில் புண்கள் உண்டாகிறது. அதிமதுர மூலிகையை ஊறவைத்து அதன் நீரை தினமும் குடித்து வந்தால் சிறுநீர்ப்பை கிருமிகள் அழிந்து, புண்கள் சரியாகும்.
  • அதிமரத்தை பொடியாக்கி, நீரில் கலந்து வெறும் வயிற்றில் குடித்துவர குடலில் உள்ள புண்கள் சரியாகும். மேலும், காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு வரும் அல்சர் புண்களும் எளிதில் குணமடையச் செய்யும் வல்லமை பெற்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: