கிறுகிறுவென வரும் தலைசுற்றலை சமாளிப்பது எப்படி? வாங்க தெரிஞ்சுகிறலாம்..!!

தலைசுற்றல் என்பது நோய் அல்ல; அறிகுறி. ரத்த அழுத்தம் அதிகமாக அல்லது குறைவாக இருப்பது, ரத்த சர்க்கரையின் அளவு குறைவது அல்லது அதிகரிப்பது, ரத்தசோகை, கழுத்து எலும்பு தேய்மானம் போன்ற பல காரணங்களால், தலைசுற்றல் ஏற்படலாம்.

பெனைன் பாராக்ஸிஸ்மல் பொசிஷனல் வெர்டிகோ என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தலை சுற்றல் மற்றும் மயக்கம், பொதுவாக பலருக்கும் ஏற்படுகிறது. இது உண்டாகும் போது தலை சுழல்வது போல் உணர்வு வரும், உடல் நிதானத்தை இழக்கும்.

பித்தம் தலைக்கு ஏறினால் வெயிலில் செல்லும் போது தலைசுற்றி கீழே விழுந்து மயக்கம் ஏற்படும்.

எனவே பித்தம் அதிகரித்தால் பாரம்பர்ய மருந்தை எடுத்துக் கொண்டால் பித்தமும் தெளியும் பர்சும் பாதுகாக்கப்படும்.

குறைந்த ரத்த அழுத்தத்திலிருந்து ஹார்மோன் மாற்றங்கள் வரை எதுவாகவும் இருக்கலாம். சிலருக்கு கண்கள் இருட்டிக் கொண்டு காது அடைப்பது போல ஏற்படும். சில நிமிடங்களில் சரியாகிவிடும் இதற்கு வெர்டிகோ என்று பெயர். இது மெனோபாஸ் சமயங்கலில் பெண்களுக்கு அடிக்கடி ஏற்படுவதுண்டு.

உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட் குறைவதால், மூளையில் சரியான தகவல் பரிமாற்றம் நடக்காமலிருக்கும்போது தலைசுற்றல் உண்டாகும்.

தேவையான அளவு நீர் குடிக்கிறீர்களா என தெரிந்து கொள்ளுங்கள். சீரற்ற இதய துடிப்பு இருந்தால், ரத்தம் மூளைக்கு செல்வதில் பாதிப்பு உண்டாகும்.

உடனே தலை சுற்றல் உண்டாகும். வாய்வினாலும் தலை சுற்றல் உண்டாகும், வாய்வினால் வயிறில் அழுத்தம் தரப்படும்போது, நரம்புகளை பாதித்து தலை சுற்றுவது போலிருக்கும்.

முக்கிய நான்கு காரணங்கள்:

 • காதின் உட்புறம் சமநிலை இல்லாதிருத்தல்
 • தலையில் பலமாக அல்லது சிறிய அளவில் அடிபடுதல்
 • காதின் உட்புற பாதிப்பு
 • ஒற்றை தலைவலி

அறிகுறிகள்:

 • மயக்கம்
 • தலை சுற்றுவது போல் உணர்வு
 • நிலை தடுமாறுவது
 • வயிற்றுப் புரட்டல்
 • வாந்தி
 • நிற்க முடியாத நிலை
 • கண்கள் செருகுவது

தலைசுற்றலை சமாளிப்பது எப்படி?

தலைசுற்றல், 99 சதவீதம் சாதாரண பிரச்னை தான். தலைசுற்றல் வந்தால், பய உணர்வு வருவதை தவிர்க்க முடியாது. சம்பந்தப்பட்டவரை பார்த்தால், சாதாரணமாக இருப்பது போன்றே தோன்றும்; சொன்னாலும் புரியாது. ஆனால், பிரச்னை இருப்பவருக்கு, தன்னைச் சுற்றி ஏதோ நடப்பது போல், பீதியை ஏற்படுத்தும்.தலைசுற்றல் வந்தால், சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.

எந்த நிலையில் இருக்கிறோமோ, அதே நிலையிலேயே இருந்தால், சில நிமிடங்களில் சரியாகி விடும்.அப்படி இல்லாமல், பயந்து அங்கும் இங்கும் நிலை கொள்ளாமல் தவித்தால், சரியாவதற்கு கூடுதல் நேரம் பிடிக்கலாம்.

தலைச்சுற்றல் வராமல் தடுக்க

 • பச்சை நெல்லிக்காயை தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல் தீர்ந்துவிடும்.
 • வெள்ளிப்பாத்திரத்தில் உணவு சாப்பிட்டால் பித்தகோபம், சிலேத்தும கோபத்தை நீக்கி மனத்திற்கு மகிழ்ச்சி உண்டாவதுடன் உடலும் அழகுபெறும்.
 • செம்பு பாத்திரத்தில் உணவு உட்கொண்டால் உடல் உஷ்ணம் சீராகி கண்களுக்கு ஒளியூட்டும். பித்தத்தால் ஏற்படும் நோய்கள் தீர்ந்துவிடும்.
 • வெண்கல பாத்திரத்தில் உணவு சாப்பிடுவதால் களைப்பை போக்குவதுடன் உதிர பித்தத்தையும் எளிதில் போக்குகிறது.
 • இஞ்சியை நன்றாக கழுவி சுத்தம் செய்து துண்டு துண்டாக நறுக்கித் தேனில் இரண்டு மூன்று நாட்கள் ஊறவைத்து அதிகாலையில் 2 அல்லது 3 துண்டுகள் சாப்பிட்டு வந்தால் எப்படிப்பட்ட பித்தமும் தீர்ந்துவிடும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: