நோய்களைத் தடுக்கும் வயிறு சுத்தம் !

உடம்பில் சத்து குறைபாடு, இரத்த சோகை, சர்க்கரை அதிகரிப்பு என பெரும்பாலான நோய்களுக்கு வயிறே மூலாதாரமான உள்ளது. உணவே மருந்து என்று வாழ்ந்து, வயிறை முறையாக பராமரித்தால் பெரும்பாலான வியாதிகளை உங்கள் உடம்பை அண்டாமல் விரட்டலாம். அதற்கு கடைபிடிக்க வேண்டிய உணவுப் பழக்கம் என்ன என பார்க்கலாமா ?

காலையில் எழுந்ததும் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தயத்தை சாப்பிட்டு சிறிது தயிரையும் குடித்தால் வயிறு சுத்தமாகும்.

மாதுளம்பூவை தேநீராக்கிக் குடித்து வந்தால், வயிறு தொடர்பான பிரச்னைகள் நீங்கும். வறுத்துப் பொடித்த சீரகத்தை ஒரு டம்ளர் மோரில் போட்டுக் குடித்து வர வேண்டும்.

வாரத்தில் இரண்டு நாள்கள் ஒரு டம்ளர் தேங்காய்ப்பாலுடன் கருப்பட்டி சேர்த்துக் குடித்து வருவதால், வயிறு தொடர்பான பிரச்னைகள் எதுவும் வராது.

சுரைக்காயை வாரம் இருமுறை உணவில் சேர்த்துக்கொண்டால் தொப்பை கரையும்.

வாழைப்பூ, மணத்தக்காளிக் கீரையை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வயிற்றுத் தொந்தரவுகள் நீங்கும். வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் சாப்பிடக் கெட்டக் கொழுப்பு கரையும். தொப்பையும் குறையும்

அகத்திக்கீரையை வாரம் ஒருநாள் சமைத்துச் சாப்பிட வேண்டும். இதனால், மலக்குடல் சுத்தமாக இருக்கும். பப்பாளிப் பழத்தை வாரம் மூன்றுமுறை சாப்பிடுவது நல்லது.

அடிக்கடி முளைக்கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வர வேண்டும், மாதுளைப்பூ சாறு 15 மி.லி, சிறிதளவு பனங்கற்கண்டு சேர்த்து மூன்று வேளையும் குடித்து வரவேண்டும்.

எந்த உணவு எடுத்தாலும், இந்த பழக்கத்தை கடைபிடித்தால், சாப்பிடும் உணவில் உள்ள சத்துகள் முழுமையாக கிடைப்பதுடன் வயிற்றையும் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

%d bloggers like this: