சிறுநீரக கல்லடைப்பா? நிவாரணங்கள் இதோ

இன்றையக் காலக் கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் வரக்கூடிய பிரச்சனைகளில் ஒன்றுதான் சிறுநீரகக் கல் பிரச்னை. இதற்கு நம் அன்றாடம் எடுத்து கொள்ளும் உணவு முறையும் பயன் படுத்துகிற தண்ணீரும் ஒரு மூல காரணியாக இருக்கிறது. நெய், வெண்ணெய், தக்காளி, முள்ளங்கி,

பசலைக்கீரை, பட்டாணி, முந்திரி போன்றவற்றை அதிகம் உட்கொண்டால், சிறுநீரகக் கற்கள் தோன்றலாம்.

சிறுநீரில் கல்லடைப்பு உள்ளவர்கள் வாழைத்தண்டை, கூட்டு மற்றும் குழம்பு செய்து சாப்பிட்டாலோ, அல்லது பச்சையாக அதன் சாறை பிழிந்து தயிருடன் சேர்த்து பச்சடியாகச் செய்து சாப்பிட்டாலோ, உடலில் உள்ள விஷ பூச்சிகள் நீங்குவதுடன், மூத்திரப்பை கற்கள் நீங்கும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் நன்கு உலர்த்தி பொடி செய்து, காலை மாலை தேநீர் அருந்துவது போல் தண்ணீரில் கலந்து அருந்தி வந்தால் போதும், சிறுநீரகக் கற்கள் காணாமல் போகும்.

திராட்சைப் பழத்துடன் மிளகை அரைத்துச் சாப்பிட்டு வரக் கல்லடைப்பு கட்டுப்படும். சோளத்தை இடித்து மாவாக்கி களியாகக் கிண்டி சாப்பிட்டு வரச் சிறுநீர் கல் அடைப்பு மற்றும் நீர்சுருக்கு, இருமல், கக்குவான் போன்ற நோய்கள் குணமாகும்.

கற்பூரவள்ளி இலையை கசாயமிட்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரச் சிறுநீரக கற்களைக் கரைத்து வெளியேற்றும்.

%d bloggers like this: